எஸ்ஐஆர் பணிகள் நிறைவடையாத மாநிலங்களில் ‘படிவம் 6’ நிபந்தனைகள் தொடருமாம்! வாக்காளர்களை ஏமாற்றுகிறதா தேர்தல் ஆணையம்?
30 Sept 2026, 11:04 pm

எஸ்ஐஆர் பணிகள் நிறைவடையாத மாநிலங்களில் ‘படிவம் 6’ நிபந்தனைகள் தொடருமாம்!

வாக்காளர்களை ஏமாற்றுகிறதா தேர்தல் ஆணையம்?

புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் படிவத்தில் சேர்க்கப்பட்டிருந்த கூடுதல் நிபந்தனைகளைக் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தனது இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளது. எனினும்,எஸ்ஐஆர் பணிகள் இன்னும் நிறைவடையாத பிற மாநிலங்களில் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.இந்நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர்களை ஏமாற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்தியாவில் புதிய வாக்காளராகப் பெயர்களைச் சேர்க்க விரும்புவோர் ‘படிவம் 6’(Form 6) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்திருத்தப் பணி’ (SIR) என்ற பெயரில், இந்தப் படிவத்தில் சிலபுதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் இணைத்திருந்தது.

அதன்படி, புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது பெற்றோரின் பழைய வாக்காளர் அட்டையின் விவரங்களைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும், கூடுதல்உறுதிமொழிப் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டது. இதை நிரப்பத் தவறினால் விண்ணப்பத்தை முழுமையாகச் சமர்ப்பிக்க முடியாது. இந்தநடைமுறை உள்ளிட்ட சில கெடுபிடிகள் காரணமாகக் கோடிக்கணமான தகுதியான வாக்காளர்களின் வாக்குகள்பறிக்கப்பட்டன. இதனால் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்தன.

இந்த எஸ்ஐஆர் நடைமுறை தொடங்கியபோதே இது பாஜகவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் வளைக்கப்படும் சதி எனக் கடும் எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், வாக்காளர் விண்ணப்பப் படிவங்களில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றால் சட்ட ரீதியில்தான் மாற்றங்கள் செய்ய வேண்டும்.அப்படிச் செய்யாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகமுடிவெடுத்து இந்த நிபந்தனைகளை இணைத்துள்ளார். இந்தப் படிவம் 6-ல் இணைக்கப்பட்ட கூடுதல் நிபந்தனைகளுக்குச் சுக்பீர் சிங்சாந்து, விவேக் ஜோஷி ஆகிய இரு தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றியஅமைச்சரவைச் செயலாளருக்குக் கடிதமும் எழுதினர் என்ற உண்மையை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனம்அம்பலப்படுத்தியது.

தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக இத்தகைய மாற்றங்களைச் செய்தது “சட்டவிரோதமானது” என்று தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளே எதிர்ப்புத் தெரிவித்த செய்தி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், பாஜகவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் வளைக்கப்படுகிறது என்றகுற்றச்சாட்டையும் இது உறுதிப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தனது இணையதளத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய கூடுதல் நிபந்தனைப் பக்கத்தை (செவ்வாய் - புதன்கிழமை) இரவு நேரத்தில் நீக்கியுள்ளது.சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்து இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட மாநிலங்களில் இந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. பணிகள் இன்னும் நிறைவடையாத பிற மாநிலங்களில் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் பணிகள் நிறைவடையாத மாநிலங்களில் இந்த நிபந்தனைகளைத் தொடர்வதன் மூலமாகத் தேர்தல் ஆணையம் தனது தவறைத் திருத்தாமல் தொடர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.