தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்சியாளர் தேர்ந்தெடுத்த நடுவர்; மக்களுக்கு மூடப்பட்ட வீதி! - எம்.ஏ. பேபி

13 Nov 2026, 9:55 pm
ஆட்சியாளர் தேர்ந்தெடுத்த நடுவர்; மக்களுக்கு மூடப்பட்ட வீதி! - எம்.ஏ. பேபி

ஆட்சியாளர் தேர்ந்தெடுத்த நடுவர்; மக்களுக்கு மூடப்பட்ட வீதி! - எம்.ஏ. பேபி

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; அல்லது நீதிமன்றக் கண்காணிப்பிலான விசாரணையோடு அவரை நீக்கும் நடைமுறை தொடங்கப்பட வேண்டும். ஆளும் தரப்புக்குச் சாதகமாகக் கட்டமைக்கப்படாத தேர்வுக் குழுவை மீட்டமைக்கவும், பிரிவு 16-ஐ நீக்கவும் 2023 சட்டம் திருத்தப்பட வேண்டும். எஸ்ஐஆர் நீக்கத் தரவுகள் வெளியிடப்படவேண்டும்;

“போரில் முதலில் பலியாவது உண்மை” என்ற வரியோடு தொடங்கும் கட்டுரை ஒன்றை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழில் எழுதியிருந்தார். தேர்தல் ஆணையம் மீதான விமர்சனங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டவை; ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றம்அங்கீகாரம் அளித்துவிட்டது; அதற்கு எதிரான வீதிப் போராட்டம் அராஜகத்தை நோக்கிய நகர்வு – இதுவே, நாம் புரிந்துகொண்ட வரையில், அவரது வாதம். “உண்மைக்குப் பிந்தைய அரசியல்” (Post-truth politics) பற்றிய அந்தக் கட்டுரை, தேர்தல் ஆணையத்துக்குள் நடப்பதை விவரிக்க “உண்மைக்குப் பிந்தைய” என்ற சொல்லே கூட போதாது என்று காட்டிய ஓர் ஆவணத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

ஆணையருக்கு எதிராக ஆணையர்கள்

செப்டம்பர் 23 அன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழில் ரித்திகா சோப்ரா வெளியிட்ட புலனாய்வுக்

கட்டுரை 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான எழுத்துப்பூர்வக் குறிப்புகளையும் கடிதப் போக்குவரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவரான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர், தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராகப் பத்து மாதங்களில் 14 முறை (ஒரே நாளில் நான்கு முறை உட்பட) எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளனர். வாக்காளர்களைச் சேர்ப்பது, பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியலை யார்பொறுப்பில் வைத்திருப்பது உள்ளிட்ட முடிவுகள் அவை. அவற்றில் சிலவற்றை “அங்கீகாரமற்றவை, சட்டவிரோதமானவை” என்றும் அவர்கள் குறிப்பி ட்டுள்ளனர். மாற்றுக் கருத்து உண்மைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற ராஜ்நாத் சிங்கின் ஒரு கருத்தை ஏற்கலாம். வாருங்கள், உண்மைகளைப் பார்ப்போம்.

இன்றைய செயல்பாட்டு முறை வேறு மாதிரித் தோன்றச் செய்தாலும், தேர்தல் ஆணையம் ஒரு தனிநபர் அமைப்பு அல்ல. தேர்தல்களை மேற்பார்வை யிடும், வழிநடத்தும், கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, தேர்தல் ஆணையத்துக்குவழங்குகிறது; தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தனிப்பட்ட முறையில் அல்ல. மற்ற ஆணையர்கள்அலங்காரப் பொம்மைகள் என்று தலைமை ஆணையர் கருதினாலோ, அப்படிச் செயல்பட்டாலோ, அது அரசமைப்புச் சட்ட மீறல். பிரிவு 324(5)-ன்படி, தலைமைஆணையரை உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே நீக்க முடியும்; ஆனால் மற்ற ஆணையர்களைத் தலைமை ஆணையரின் பரிந்துரையின் பேரில் மட்டுமேநீக்க முடியும். ஆக, யாரை எதிர்த்து இருவரும் எழுதினார்களோ, அவராலேயேநீக்கப்படக்கூடியவர்கள் அவர்கள்.

“அனைத்து முடிவுகளும் ஒருமனதானவை” என்பதே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு ஆணையம் அளித்த பதில். தலைமை ஆணையருக்கே நகல் அனுப்பப்பட்ட 14 எழுத்துப்பூர்வ எதிர்ப்புகளோடு இந்தக் கூற்று நேரடியாக முரண்படுகிறது. அந்த எதிர்ப்புகளை எழுதியவர்கள் எதிர்க்கட்சிகள் அல்ல; ஆணையர்களே. அவைஆதாரமற்றவை என்றால்தீர்வு எளிது: ஆணையம் கோப்புக் குறிப்புகளை வெளியிடட்டும்; மென்பொருள் அணுகல் பதிவுகளைத் திறக்கட்டும். மாநில அதிகாரிகளைப் புறக்கணித்து, வாக்காளர்தரவுத்தளத்தைத் தில்லியில் மையப்படுத்த அனுமதி அளித்தது யார் என்பதை ஆவணங்களே சொல்லட்டும். ஆவணங்களைக் காட்டாமல்நம்பிக்கை மட்டும் கோரும் அமைப்பு, கோருவது நம்பிக்கை அல்ல; பணிந்து செல்லுங்கள் என்பதே!

நீக்கமே நோக்கம்

இந்தப் பொறுப்பற்ற தன்மை வாக்காளரின் வாசலைத் தட்டுவது சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மூலமாகத்தான். அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டதாக ராஜ்நாத் சிங் கூறுகிறார். பீகாரில்அதைத் தடுத்து நிறுத்த நீதிமன்றம் மறுத்தது உண்மைதான். ஆனால் அதே வழக்கில் ஆணையத்தைத் திருத்தவும் வேண்டியிருந்தது. “மக்களுக்குத் தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு” என்று கூறி, நீக்கப்பட்ட சுமார் 65 லட்சம் பேரின் பெயர்களைத் தனித்தனிக் காரணங்களோடு வெளியிட உத்தரவிட்டது. குறுகிய அதாவது, ‘கிடைக்காத - தேடஇயலாத ஆவணங்களை மட்டுமே பட்டியலை வலியுறுத்துவது உண்மையான வாக்காளர்களைத் தடுப்பதால், ஆதாரை அடையாளச் சான்றாக ஏற்க உத்தரவிட்டது. ஆக, இதுசட்டரீதியாகச் சவாலுக்கு உள்ளாகி, நீதிமன்றத்தால் ஒட்டுப்போடப்பட்ட நடைமுறை; ராஜ்நாத்சிங் சொல்வதைப் போல “சட்டப்படி சரியானதும் நிர்வாகரீதியாக நியாயமானதும்” அல்ல.

“தகுதியற்றவர்களை” நீக்கும் தூய்மைப்படுத்தல் என்று எஸ்ஐஆர் மக்களிடம் சொல்லப்பட்டது; அந்தச்

சொல்லின் உள்ளர்த்தம் அனைவருக்கும் புரிந்தது. ஆனால் குடியுரிமையைத் தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறி, அத்தகைய வழக்குகளைக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரியிடம் அனுப்பஉத்தரவிட்டது. ஆனால் அந்தத் தகுதிவாய்ந்த அதிகாரி யார் என்பதே ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை என்றுதகவல் அறியும் உரிமைச் சட்டக் கேள்வியில் தெரியவந்துள்ளது. சொல்லப்பட்ட நோக்கத்தை விலக்கிப் பார்த்தால்,எஞ்சுவது நீக்கம் மட்டுமே – ஏழைகள், புலம்பெயர்ந்தோர், எழுத்தறிவற்றோர், கணவர் வீட்டு வாக்காளர்பட்டியலுக்கு இன்னும் பெயர் மாறாத அண்மையில் திருமணமான பெண்கள் ஆகியோரின் நீக்கம்.

இதற்குப் பதில் சொல்லாமல், அனைத்து விமர்சனங்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) பற்றிய விவாதத்துக்குள் சுருக்கவே ராஜ்நாத் சிங் விரும்புகிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிரான ஆட்சேபனைகளை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்றாலும், மக்கள் மனதில் பல கேள்விகள் உள்ளன; அவை விரைவில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். 100 சதவீத விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்ற கோரிக்கையைமீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த எளிய கோரிக்கைகூட ஏற்கப்படாதது, இயந்திரங்கள் உள்ளிட்ட முழுச்செயல்முறையின் நம்பகத்தன்மை மீதே கடும் ஐயங்களை எழுப்புகிறது. ஆனாலும் நமது முதன்மை ஆட்சேபனை, ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படைத்தன்மையை முற்றாக மறுக்கும் ஒருநடைமுறையின் மூலம் மக்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதுதான். அதைப் புறக்கணிக்க முடியாது.

சட்டச் சாயம் பூசிய கைப்பற்றல்

தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தைத் தங்கள் அரசு “நிறுவனமயமாக்கியது” என்பதே ராஜ்நாத் சிங்கட்டுரையின் மையக் கருத்து. வரலாறு வேறு கதை சொல்கிறது. நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை, பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி அடங்கிய குழு ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று 2023 மார்ச்சில் உச்சநீதிமன்றம் வழிகாட்டியது. சில மாதங்களிலேயே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சூழலில், தலைமை நீதிபதியை நீக்கி, ஒன்றிய அமைச்சரவை அமைச்சர் ஒருவரைச் சேர்த்துச் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் குழுவில் ஆளும் தரப்புக்கு 2:1 பெரும்பான்மை உள்ளமைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்புத்தெரிவிக்கலாம்; ஆனால் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படுவார். இது நிறுவனமயமாக்கல் அல்ல; சட்டச் சாயம்பூசி நியமன நடைமுறையையே கைப்பற்றிய செயலாகும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (NJAC) ரத்துசெய்த தீர்ப்பைத் தங்கள் அரசு மதித்ததாகச் சொல்லும் ராஜ்நாத் சிங், தேர்வுக் குழு குறித்த உச்ச நீதிமன்றவழிகாட்டுதலைச் சில மாதங்களிலேயே தங்கள் அரசு முறியடித்ததை வசதியாக மறைக்கிறார்.

அடுத்தது சட்டப் பாதுகாப்பு. 2023 சட்டத்தின் பிரிவு 16, தலைமைத் தேர்தல் ஆணையராகவோ தேர்தல் ஆணையராகவோ இருப்பவர் அல்லது இருந்தவர், அலுவல் கடமையைச் செய்யும்போது அல்லது செய்வதாகக் கூறிச் செய்த எந்தச் செயலுக்கும் பேச்சுக்கும் எதிராக, எந்த நீதிமன்றமும் சிவில், கிரிமினல் வழக்கை ஏற்கவோ தொடரவோ கூடாது என்கிறது. இந்தப் பாதுகாப்பு பதவிக்காலத்தோடு முடிவதில்லை; ஓய்வுக்குப் பிறகும் தொடர்கிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 361-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்புகூடப் பதவியில் இருக்கும் வரைதான்! ஆக, நாட்டின் தலைவரைவிடநீடித்த சட்டக் கவசம் இன்று தேர்தல் ஆணையருக்கு வலிந்து தரப்பட்டுள்ளது. நேர்மையான நடுவருக்குஎந்த அரசும் வாழ்நாள் ‘கவசம்’ தர வேண்டிய தில்லை; தான் ‘பயன்படுத்த’ நினைக்கும் நடுவருக்கே அதைத் தரும். ஆணையம் அவ்வளவு தூய்மையா னது என்றால், இந்தப் பாதுகாப்பு யாரைக் காப்பதற்கு?

போராட்டத்தால் பின்வாங்கிய அரசு

தனக்கு வசதியான அரசமைப்பு வரலாற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, முதல் அரசமைப்புத் திருத்தத்தையும் அவசரநிலையையும் ராஜ்நாத் சிங் மேற்கோள் காட்டுகிறார். முதல் திருத்தத்தை அன்றே நாடாளுமன்றத்தில் ஏ.கே. கோபாலன் உள்ளிட்டோர் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்த்தது. அவசரநிலைக் காலத் திருத்தங்களை நாடாளுமன்றத்திலும் வீதிகளிலும் சிபிஐ(எம்) எதிர்த்தது; ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்களும் தலைவர்களும் சிறை சென்றனர். அவரது நினைவூட்டல் நமக்குத் தேவையில்லை. அதே போல, காங்கிரசின் கடந்த காலத்தைக் காட்டுவது, நிகழ்காலத்தின் முக்கியக் கேள்விக்குப் பதிலாகாது.

மக்கள் குரலைக் கேட்டு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதாகவும் அவர் கூறுகிறார். 2020 செப்டம்பரில், வாக்கெடுப்புக் கோரிக்கையை நிராகரித்து, குரல் வாக்கெடுப்பில் அவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன; எட்டு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஓராண்டு வீதிப்போராட்டம், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரிழப்பு, ஹரியானா எல்லையில் முள்வேலி, அகழி,கண்ணீர்ப்புகை – இவற்றுக்குப் பிறகே அவை திரும்பப் பெறப்பட்டன. ராஜ்நாத் சிங் இன்று “அராஜகம்” என்று முத்திரை குத்தும் அதே வகை எதிர்ப்பின்அழுத்தத்தால்தான் அரசு பின்வாங்கியது.

சுருங்கும் போராட்ட வெளி

2026 அக்டோபர் 2 அன்று, புதுதில்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்சா சம்ஹிதா (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அமைதியாகப் போராடுவோரைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கக் கூடாது, மெட்ரோ வழக்கம்போல் இயங்க வேண்டும், தடை உத்தரவுப் பகுதியை ஆட்களைப் பிடித்துச் செல்லும்உரிமமாகக் கருதக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு மறுநாளே, அக்டோபர் 10 அன்று, சட்டம்–ஒழுங்கு நடவடிக்கை என்றபோர்வையில் ஒன்றுகூடுவதற்கே அரசியல் தடை விதிக்கப்பட்டது. இரண்டு நாட்களிலும் போராட்டக்காரர்களால்எந்த வன்முறையும் நிகழவில்லை; வன்முறை இருந்தது கைது நடவடிக்கையில் மட்டுமே. சக ஆணையர்களாலேயே அரசமைப்புக்குமுரணாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்என்பதே மக்களின் கோரிக்கை. அதற்கு அரசு அளித்த பதில் தடுப்பு வேலிகள்.

போராட்ட வெளிகள் ஆண்டுதோறும் சுருங்கி வருகின்றன. 1993-ல் போட் கிளப் மூடப்பட்டு, ஆர்ப்பாட்டங்கள் ஜந்தர் மந்தருக்குத் தள்ளப்பட்டன. கோவிட் பொதுமுடக்கம் வரை, மண்டி ஹவுஸிலிருந்து நாடாளுமன்ற வீதி வரையிலான பேரணிப் பாதை வழக்கத்தில் இருந்தது. அதன் பிறகு அனுமதி கிடைப்பதே அரிதாகிவிட்டது; பத்து நாள் முன்கூட்டியே விண்ணப்பிப்பது இப்போது விதியாம். அமைதியானபோராட்டம் அடிப்படை உரிமை என்று 2018 மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது; 2012 ராம்லீலா மைதான வழக்கிலும் இதே கொள்கையைஉறுதிப்படுத்தியிருந்தது. அரசு நினைத்தபோது மூடக்கூடிய இடத்தில், பத்து நாள் முன்பே அரசின் அனுமதி பெறவேண்டும் என்றால் அது உரிமையா? இடம் இல்லாத - கூடும் சுதந்திரம் வெற்று வாசகம்; இந்த ஆட்சியின் பல“ஜும்லா”க்களில் இன்னொன்று.

அம்பேத்கரை முழுமையாகப் படியுங்கள்

ராஜ்நாத் சிங் அம்பேத்கரையும் மேற்கோள் காட்டுகிறார். அதற்கு முன் அந்த முழு உரையையும் அவர் படித்திருக்க வேண்டும். அரசமைப்புக்கு முரணான வழிமுறைகள் குறித்த அம்பேத்கரின் எச்சரிக்கை, அரசமைப்பு வழிமுறைகள் திறந்திருக்கும் என்ற அனுமானத்தில் அமைந்தது – செவிசாய்க்கும் நீதிமன்றங்கள், பாரபட்சமற்ற நடுவர்(தேர்தல் ஆணையர்), ஒன்றுகூட வீதி. நடுவரே ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வழக்குகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு, வீதியும் அடைக்கப்படும்போது, அம்பேத்கரின் அந்த அனுமானத்தையே தோற்கடித்து விடுகிறது. அரசியல் சமத்துவமும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வும் இணைந்திருக்கும் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைகிறோம் என்றும் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் கூறினார். ஏழைகளையும் புலம்பெயர்ந்தோரையும் புதுமணப் பெண்களையும் நீக்கும் வாக்காளர் பட்டியல், செயல்பாட்டில் இருக்கும் அந்த முரண்பாடே. பாஜக–ஆர்எஸ்எஸ் எவ்வளவு உரக்கக் கூச்சலிட்டா லும், பதவி விலகல் கோரிக்கை என்பது அராஜ கத்துக்கான அழைப்பு அல்ல; அரசமைப்புச் சட்டப்படியான ஆட்சிக்கான கோரிக்கையே!

குறைந்தபட்ச நிபந்தனைகள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; அல்லது நீதிமன்றக் கண்காணிப்பிலான விசாரணையோடு அவரை நீக்கும் நடைமுறை தொடங்கப்பட வேண்டும். ஆளும் தரப்புக்குச் சாதகமாகக் கட்டமைக்கப்படாத தேர்வுக் குழுவை மீட்டமைக்கவும், பிரிவு 16-ஐ நீக்கவும் 2023 சட்டம் திருத்தப்பட வேண்டும். எஸ்ஐஆர் நீக்கத் தரவுகள் வெளியிடப்பட வேண்டும்; எந்தப் பெயரும் நீக்கப்படும் முன், செயல்படும் விசாரணை அமைப்பு இருக்க வேண்டும். ஜந்தர் மந்தரும் நாடாளுமன்ற வீதிப் பாதையும் மீண்டும் திறக்கப்பட வேண்டும்; பிரிவு 163-ன் கீழான பொதுப்படையான தடை உத்தரவுகள் முடிவுக்கு வர வேண்டும். தோற்றவரும் முடிவை ஏற்கக்கூடிய ஒரு போட்டிக்கு இவையே குறைந்தபட்ச நிபந்தனைகள். இவற்றை நிறைவேற்ற முடியாவிட்டால் அரசு அதை வெளிப்படையாகச் சொல்லட்டும். தனது தேர்தல் இயந்திரமே “உண்மைக்குப் பிந்தைய” என்ற சொல்லுக்குப் பொருள் தரும் கோப்புக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்கும்போது, உண்மைக்குப் பிந்தைய அரசியல் பற்றிக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கக் கூடாது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அக்டோபர் 25, 2026 தமிழில் சுருக்கம் : எஸ்பிஆர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.