தமிழ்நாடு தேர்தலில் தாக்கம் ஏற்படுத்திய குழந்தைகள்?
15 Jul 2026, 9:57 pm
<p><strong>தமிழ்நாடு தேர்தலில் தாக்கம் ஏற்படுத்திய குழந்தைகள்?</strong></p><p>தேர்தல் ஆணையம் விளக்கம் சென்னை, ஜூலை 15- தமிழ்நாடு சட்டப்பே ரவைத் தேர்தலில் குழந்தை கள் வாக்காளர்களின் நடவடிக்கைகளில் செல் வாக்கு செலுத்தியதாகக் கருத முடியாது என்று இந்திய தேர்தல் ஆணை யம் சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. வாக்காளர்கள் அனை வரும் சுதந்திரமான முடிவு களை எடுக்கும் திறன் கொண்ட பெரியவர்கள் என்பதாலும், வாக்குப்பதி வின் ரகசியத்தன்மைக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு இருப்பதாலும், குழந்தைகள் செல்வாக்கு செலுத்தி னார்கள் என்ற அனுமானத் திற்கு இடமில்லை என்று தேர்தல் ஆணையம் நீதி மன்றத்தில் விளக்கியுள்ளது. இருப்பினும், தற்போ தைய சமூக ஊடகக் கால கட்டத்தைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளைக் குறிவைத்து மேற்கொள் ளப்படும் அரசியல் பிரச் சாரங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதன் அவசியம் குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் பொருத்தமான வழிகாட்டு தல்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்னி லையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
