தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக உள்துறை செயலாளரையும் மாற்றியது தேர்தல் ஆணையம்!

12 Apr 2026, 5:30 am
தமிழக உள்துறை செயலாளரையும் மாற்றியது தேர்தல் ஆணையம்!

தமிழக உள்துறை செயலாளரையும் மாற்றியது தேர்தல் ஆணையம்!

சென்னை, ஏப். 11 - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில், மாநில நிர்வாகத்தின் முக்கிய உயர்பதவிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் திடீர் மாற்றங்கள் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் சுயாதீனமாக செயல்படாமல் ஒன்றிய பாஜக அரசின் அறிவிக்கப்படாத முகவராகவே செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்து வருகின்றன. ஒரு நாளுக்கு ஒரு அதிரடி உத்தரவு வழியி மற்றும் தலைமைச் செயலாளர் மாற்றம் குறித்த விவரங்கள் அங்கீகரிக்கப்பட்டன. ஏப்ரல் 10 அன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11 அன்று தமிழக உள்துறை செயலாளராக பணியாற்றி வந்த திருக்குமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய உள்துறை செயலாளர் உடனடியாகப் பதவி ஏற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளர் மாற்றமும் அதிகாரிகளும் சந்தேகமும் இதற்கு முன்பாகவே தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சிவ்தாஸ்மீனா உடனடியாக நியமிக்கப்பட்டு குறிப்பிட்டத்தக்கது. இந்த நியமனம் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது சிவ்தாஸ்மீனா அவருக்கு முதல்வரின் செயலாளராக பணியாற்றியவர். இதனால் இந்த மாற்றம் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. போலீஸ் துறையிலும் பரவும் மாற்ற அலை இதேபோல், ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனங்களுக்கு முன்னதாக, தேர்தல் அறிவிப்பு வெளியான நேரத்தில் தில்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தங்களுக்கு விருப்பத்தகாத அதிகாரிகளாக மாற்றும் தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், ஈரோடு, கரூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

'திட்டமிட்ட அரசியல் தலையீடு' இந்த மாற்றங்கள் சாதாரண நிர்வாக மாற்றங்கள் அல்ல; தேர்தல் முடிவை சாதகமாக மாற்றும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இந்த மாற்றங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்பட்டவை என்று கூறுகின்றன.

இந்த தொடர் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் நிர்வாக அமைப்பை இவ்வாறு மாற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே பாதிக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலை மாற்றங்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.