தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

"பாஜக, அதிமுகவின் கருவியாக தேர்தல் ஆணையம்" திருமாவளவன் கண்டனம்

10 Apr 2026, 5:30 am
"பாஜக, அதிமுகவின் கருவியாக தேர்தல் ஆணையம்" திருமாவளவன் கண்டனம்

"பாஜக, அதிமுகவின் கருவியாக தேர்தல் ஆணையம்" திருமாவளவன் கண்டனம்

சென்னை, ஏப்.9- தலைமைச் செயலாளர் முன்தோறும் ஜானகி பதவி நீக்கம் என்பது பாஜக - அதிமுகவின் கருவியாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில், 'இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முன்தோறும் ஜானகியை அப்பதவியிலிருந்து நீக்கி வேறொரு அதிகாரியை நியமித்திருப்பது அப்பட்டமான அதிகார மீறலாகும். இந்த எதேச்சதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது பாஜகவின் மறைமுக அரசியலுக்குத் தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்பதற்குத் தெளிவான சான்றாகும்.

தற்போது மிகச் சிறந்த நேர்மையான அதிகாரியாகப் பெயர் பெற்ற தலைமைச் செயலாளர் முன்தோறும் ஜானகியை நீக்கியிருப்பதன் மூலம், தேர்தல் ஆணையம் தனது நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது. சட்ட நடைமுறையின மீறிய தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக முறையைச் சீரழிப்பதாக உள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்துப் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் சீர்குலைவு வேலைகளைத் தடுத்து நிறுத்த திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெற வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பணியாற்றுவோம். மக்கள் சக்தியின் முன்னால் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துவம் செல்லுபடியாகாது என்பதை நிரூபித்துக் காட்டுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.