தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

24 Mar 2026, 3:23 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

வாக்குப் பதிவுக்குப் பிந்தைய  கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, மார்ச் 24- 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி வாக்குப் பதிவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126ஏ பிரிவுபடி, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதும், அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வழியாக வெளியிடுவதும் தடை செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விதிமுறையை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இதன்படி, ஏப்.9 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதும் வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126(1)(பி) பிரிவின்கீழ், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்தே கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்பட எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏப்.3-இல் பிரதமர் மோடி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் ராம லிங்கம் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின்  வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி யில் ரோடு ஷோ நடத்தி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்” என்றார்.

எஸ்.சி, எஸ்.டி ஆணையத் தலைவர் எஸ்.தமிழ்வாணன் மறைவுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இரங்கல்

சென்னை, மார்ச் 24 - தமிழ்நாடு எஸ்.சி/எஸ்.டி  ஆணையத் தலைவர் எஸ்.தமிழ்வா ணன் உடல் நலக்குறைவால் ஞாயி றன்று காலமானார். அவருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு  முன்னணி வெளியிட்டுள்ள இரங்கல்  செய்தியில், “தமிழ்வாணன் அவர்கள்  2005 முதல் 2016 வரை சென்னை உயர்  நீதிமன்றத்தின் நீதிபதியாக பணி யாற்றியவர். பின்னர் 2021-இல்  மாநில எஸ்.சி/எஸ்.டி ஆணையத்  தலைவராக பொறுப்பேற்றார். ஆணையத் தலைவராக பொறுப் பேற்றவுடன் கல்வி, வேலை, நில  உரிமை போன்றவற்றில் பட்டியல்  சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி யின மக்களின் முன்னேற்றம் குறித்து  தமிழக அரசுக்கு பல பரிந்துரை களை முன் வைத்தார். குறிப்பாக ஆதிதிராவிடர் மாண வர்கள் விடுதிகளை ஆய்வு செய்து அங்குள்ள குறைபாடுகளை சரி செய்ய தமிழக அரசுக்கு ஆணையத் தின் சார்பாக பரிந்துரைகளை முன்வைத்தார். பட்டியல் சமூக மக்களிடமிருந்து வரும் புகார் மனுக் களை உடனுக்குடன்  விசாரிப்பது  மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு சம்மன் அனுப்பி முழுமை யான விசாரணையை நடத்தும்  வழக்கத்தை நடைமுறையாக்கினார். வன்கொடுமை குற்றங்கள் நடை பெறும் போது நேரடியாக களத்திற்கு சென்று விசாரணை நடத்தியவர். சாதி ஆணவ படு கொலைகளைத் தடுப்பதற்கு தனி சட்டம் வேண்டும் என்பதை தமிழக அரசுக்கு பரிந்துரைத்தவர். இவரது இழப்பு சமூக நீதி இயக்கங் களுக்கு பெரும் இழப்பாகும்.  இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனை வருக்கும் தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி தனது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக் கொள் கிறது” என கூறப்பட்டுள்ளது.

மக்களவை தொகுதி எண்ணிக்கையில் மாற்றம் கூடாது: முதல்வர்

சென்னை: மாநிலங்களின் தற்போதைய மக்கள வைத் தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும்  திட்டத்தை எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், மாநிலங்களுக்கு நியாயமான தொகுதி மறுவரையறை வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களின் அரசியல் மற்றும் மக்கள் பிரதி நிதித்துவ சமநிலையை பாதிக்கும் வகையில் மக்களவை  தொகுதி அளவை மாற்றுவது ஏற்றுக் கொள்ள முடியா தது என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக  சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.  ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில்  ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளி லும், திமுக 13 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள்  கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் முடிவு எட்டப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் பட்டியல்  வில்லியனூர் சிவா, மங்கலம் ரங்கன், திருபுவனை  அங்காளன், பாகூர் செந்தில்குமார், முதலியார்பேட்டை சம்பத், உப்பளம் அனிபால் கென்னடி, உருளையன்பேட்டை  கோபால், நெல்லித்தோப்பு கார்த்திகேயன், ராஜ்பவன் விக்னேஷ் கண்ணன், காலாப்பட்டு செந்தில், கதிர்காமம்  வடிவேலு, காரைக்கால் தெற்கு நாஜிம், நிரவி டி.ஆர்.  பட்டினம் நாக தியாகராஜன்.

ரயில் டிக்கெட் ரத்து விதிகளில் மாற்றம்

சென்னை: ரயில் டிக்கெட் ரத்து நடைமுறைகளில் புதிய  மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என இந்திய  ரயில்வே தெரிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி  நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்தால் எந்தத் தொகை யும் திருப்பித் தரப்படாது. ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்குள், ஆனால் எட்டு மணி நேரத்திற்கு முன்பு  டிக்கெட் ரத்து செய்தால் கட்டணத்தின் 50 சதவீதம் மட்டும் திருப்பித் தரப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திலிருந்து, 24 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்தால், ரத்து கட்டணத்துடன் கூடுதலாக பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு 72  மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் ரத்து செய்தால் மட்டுமே  தற்போதைய நடைமுறையின்படி முழு கட்டணம் திருப்பித் தரப்படும். பயணிகள் இந்த புதிய நடைமுறை களை கவனத்தில் கொண்டு டிக்கெட் ரத்து செய்ய  வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள னர்.

திமுக கூட்டணிக்கு ஆதரவு: பழ.நெடுமாறன்

தஞ்சாவூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக  கூட்டணிக்கு ஆதரவளிப்பது என தஞ்சாவூரில் செவ்வா யன்று நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணி செயற்குழு  கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார். அவ்வமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் தலை வர் செ.ப.முத்தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.  பின்னர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறு கையில், “தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாட்டின் நலன்கள்,  தமிழ் மொழிக்கு எதிராக இந்தி, சமஸ்கிருத திணிப்புகள்,  தமிழ் தேசியம் மற்றும் மொழி வழி தேசிய உணர்வுகளை  அடக்கி ஒடுக்குவது, இந்து மதவாத தேசியத்தை தூக்கிப்  பிடிக்கும் பாஜக, பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உள்ளது. இந்த பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் முதன்மையான கடமையாகும். எனவே,  பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில் திமுக  கூட்டணிக்கு ஆதரவு அளித்து, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி

புதுச்சேரி,  மார்ச் 24- புதுச்சேரி சட்டமன்றத் தேர்த லில் உசுடு, நெட்டப்பாக் கம், உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடு வதாக விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலை வர் திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிகவிற்கு ஒரே ஒரு தொகுதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் இந்தத் திடீர் முடிவு  அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.