அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!
15 Mar 2026, 4:11 pm
<p><strong>அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்!</strong></p>
<p>கோவை, மார்ச் 15– தமிழ்நாட்டிற்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதி முறைகளை அமல்படுத்தும் பணி களில் மாவட்ட நிர்வாகங்கள் தீவி ரம் காட்டி வருகின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026க்கான அட்டவணையை இந்தி யத் தேர்தல் ஆணையம் ஞாயி றன்று வெளியிட்டது. அதன்படி, ஏப்.23 ஆம் தேதியன்று வாக்க ளிப்பும், மே 4 ஆம் தேதியன்று முடி வுகளும் வெளியாகிறது. இந்நிலை யில், தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி கள் (Model Code of Conduct) உட னடியாக அமலுக்கு வந்தன. அதன் படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் தொடர்பான சாதனை விளக்கப் படங்கள் அனைத்தும் அதிரடியாக அகற்றப் பட்டன. அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணி மாவட்ட நிர்வாகத் தால் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள அனைத்து வாகனங்களி லும் கண்காணிப்பு வசதிக்காக ஜிபிஎஸ் (GPS) கருவிகள் பொருத் தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பணப் புழக்கம் மற் றும் பரிசுப் பொருட்கள் விநியோ கத்தைத் தடுப்பதற்காக அமைக்கப் பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை வாகனங்களின் (Flying Squads) செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மேலும், தேர் தல் விதிகளின்படி கோவையின் முக்கியச் சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் அமைந்துள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் அனைத்தும் சாக்குப்பை களைக் கொண்டு மூடி மறைக்கப் பட்டன. பொதுச் சுவர்களில் உள்ள அரசியல் விளம்பரங்களை அழிக் கும் பணியும் தீவிரமாக நடை பெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள் ளது.</p>
