முந்தய பக்கம்

அனுமதிமின்றிக் தேர்தல் பிரச்சாரம்:

10 Apr 2026, 5:30 am
அனுமதிமின்றிக் தேர்தல் பிரச்சாரம்:

அனுமதிமின்றிக் தேர்தல் பிரச்சாரம்:

மத்தூர் தவெக நிர்வாகிகள் 20 பேர் மீது வழக்குப் பதிவு! கிருஷ்ணகிரி, ஏப்.9- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் பகுதியில் உரிய அனுமதியின்றித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகத் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதியன்று மத்தூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே உரிய அனுமதி பெறாமல் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துத் தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் (Flying Squad), விதிமுறையை மீறிச் செயல்பட்டதாக மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram