முந்தய பக்கம்

மானாமதுரையில் வாக்கு சேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
மானாமதுரையில் வாக்கு சேகரிப்பு

மானாமதுரையில் வாக்கு சேகரிப்பு

"பெண்களை இழிவுபடுத்தியவர் எதிர் வேட்பாளர்" வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் குற்றச்சாட்டு மானாமதுரை, ஏப்.8- மானாமதுரை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெண்களை இழிவுபடுத்தியவரே நமக்கு எதிராக நிற்கும் வேட்பாளர் என திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் குற்றஞ்சாட்டினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகரில் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது, பொதுமக்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்துகள் வெளியிட்டவர் தான் எதிர்க்கட்சியின் வேட்பாளர் என்று தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தில் திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி, அண்ணாதுரை மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 14வது வார்டு திமுக உறுப்பினர் சதீஷ் குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram