மூன்று மாநிலங்களில் தேர்தல் பரப்புரை நிறைவு!
7 Apr 2026, 7:15 pm

கேரளம், புதுச்சேரி, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இன்று நிறைவு பெற்றது.

கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வரும் 9-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்று மாநிலங்களிலும் மார்ச் மாதம் இறுதியில் இருந்து முழு வீச்சில் நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரை, இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில் சிபிஎம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 883 வேட்பாளர்களும், புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, காங்கிரஸ், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 294 வேட்பாளர்களும், அசாமில் 126 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 722 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ஆம் தேதி வெளியாகிறது.