தேர்தல் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி
28 Mar 2026, 4:13 pm
<p><strong>தேர்தல் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி</strong></p>
<p>அறந்தாங்கி, மார்ச் 28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யை அடுத்த ஆவுடையார்கோவில் கடைவீதியில், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் ஆய்வாளர் தலைமையிலும், அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா முன்னிலையிலும், வாக்காளர் விழிப்புணர்வு, கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கட்டைக்கால் ஆட்டம் ஆகியவற்றின் மூலம் ஆவுடையார்கோவில் கடைவீதி மற்றும் நான்குரத வீதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து, அந்த சாலையில் சென்ற வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வருவாய்த் துறையினர், ஊரக உள்ளாட்சித் துறையினர் கலந்து கொண்டனர்.</p>
