100 டிராக்டர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி
3 Apr 2026, 6:05 pm

100 டிராக்டர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி, ஏப். 3-

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் அருகே, பெருமருதூர் கடைவீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணி தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடந் நடைபெற்றது.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறி பல்வேறு விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில் இந்தப் பகுதியில் டிராக்டர்கள் வைத்து விழிப்புணர்வு நடத்தினர். மணமேல்குடி தாலுகாவில் 100 % வாக்களிக்க வலியுறுத்தி 100 டிராக்டர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி பெருமருதூர் கடைவீதியில் தொடங்கி பல்வேறு கிராமங்கள் வழியாக ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

டிராக்டர் பேரணி நிகழ்ச்சியை கோட்டாட்சியர் அபிநயா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், வட்டாட்சியர்கள் சிவகுமார், மார்ட்டின் உள்ளிட்ட அலுவலர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்.