திருச்சி விரைவு செய்திகள்
30 Mar 2026, 3:40 pm

விவசாய தொழிலாளர் சங்க கிராம கூட்டம் நாகர்கோவில் ,மார்ச். 30- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திரு வட்டார் வட்டாரத்திற்குட்பட்ட குமரன் குடி ஊராட்சியில் கிராம கூட்டம் நடைபெற்ற து. ஒன்றிய தலைவர்கள் சுந்தர்ராஜ் டேவிட்ராஜ்,நடராஜன் மற்றும் ஊரக வேலை தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். ஊரக வேலை தொழிலாளர்களுக்கு வரும் நிதி யாண்டில் 200 நாள் வேலை 600 ரூபாய் சம்பளம் மற்றும் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தொடர்ந்து கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டளர்.

தேர்தல் மன்னன் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வேட்புமனு நாகர்கோவில், மார்ச். 30- நாகர்கோயில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் என அழைக்கபடும் நாகூர்மீரான் பீர்முகம் மது 56 வது முறையாக நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் ஜெயலலிதா,கேரளா முதல்வர் , நரசிம்மராவ்,போன்ற பல தலைவர்களை எதிர்த்துபோட்டியிட்டவர் என்பது குறிப்பி டத்தக்கது

சுசீந்திரம் அருகே கார், ஆட்டோ மோதி 5 பேர் படுகாயம் நாகர்கோவில், மார்ச்.30 - நாகர்கோவிலை அடுத்த தெற்கு சூரங்குடி பகு தியை சேர்ந்தவர் சுதன் (35). ஆட்டோ ஓட்டுநர். இவர் 28ஆம்தேதி தனது ஆட்டோ வில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, சுசிந்திரம் அடுத்த - குலசேகரன் புதூர்ரயில்வே கேட் அருகில் உள்ள குளத் தங்கரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதி வேகமாக வந்த கார் ஆட்டோமீது மோதியது. ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோவில் இருந்த டிரைவர் சுதன், பயணிகள் தேவி, அஞ்சு, தொல்லவிளையை சேர்ந்த தங்கம்மாள் (80), லெட்சுமி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். விபத்து குறித்து சுதன் அளித்த புகாரின் பேரில், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் ஆஸாத் நகரை சேர்ந்த நசீர் மகன், அகமது நவ்தீப் (19) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி நாகர்கோவில், மார்ச் 30 - தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவர், தற்போது நாகர்கோ வில் கிருஷ்ணன்கோவில் அருகுவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்துவரு கிறார். நாகர்கோவிலில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் லோடுமேனாக உள்ளார். திங்கனன்று (30ம்தேதி) காலையில் இவர், கோட் டார் ரயில்வே ரோட்டில் இருந்து பாறைக்காமடத் தெரு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோட்டார் பெரியவிளை தாணுலிங்க நகர் பகுதியை சேர்ந்த விஜய் என்ற பீச் ரோடு விஜய் (29) என்பவர் வழி மறித்து மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகி றது. இது குறித்து தங்கராஜ் கோட்டார் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீ சார் விசாரணை நடத்தி விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவிலில் எல்.ஐ.சி. ஏஜெண்ட்டுக்கு அரிவாள் வெட்டு நாகர்கோவில், மார்ச் 30 - நாகர்கோவில் இடலாக் குடி பட்டாரியர் நெடுஞ் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (57). எல்.ஐ.சி. ஏஜெண்ட். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவராமலிங்கம் மனைவி ஆறுமுகம் (65) என்பவருக் கும் இடையே முன் விரோ தம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலை யில், சம்பவத்தன்று ஆறு முகம், மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தை அவ தூறாக பேசியதாக கூறப்ப டுகிறது. இதை மாரிமுத்து தட்டிக்கேட்டுள்ளார். அப் போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்து வெட்டு கத்தியை எடுத்து வந்து மாரிமுத்து தலையில் வெட்டி உள்ளார். இதில் மாரிமுத்து படுகாயம் அடைந்தார். அவர் சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி, ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல் தாய், மகன், மகள் காயம்

நாகர்கோவில், மார்ச் 30 - நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை - சேர்ந்தவர் புஷ்பாகரன். இவரது மனைவி சித்ரா (39). இவர்களுக்கு 4 பிள்ளை கள் உள்ளனர். நேற்று (29ம்தேதி) நள்ளி ரவு 12.30 மணியளவில், இவர்களது வீட்டு அருகில் கும்பலாக சிலர் தகராறு செய்து கொண்டி ருந்தனர். அப்போது 4, 5 பேர் சேர்ந்து பறக்கை செட்டித்தெருவை சேர்ந்த ஆகாஷ் மற்றும் ஐ.எஸ்.இ.டி. நகர் முகமது சமீர் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இந்த சத்தம் கேட்டு சித்ரா கதவை திறந்து வெளியே வந்தார். அப் போது ஆகாஷ், முகமது சமீர் ஆகியோர் உயி ருக்கு பயந்து சித்ரா வீட்டுக்குள் நுழைந்த னர். அவர்களை துரத்தி சென்ற கும்பலும் வீட்டுக்குள் நுழைந்து அவர்களை தேடி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதை தடுக்க முயன்ற சித்ரா மற்றும் அவரது மகன் சுனில், மகள் ஜெயந்தி ஆகி யோரையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல்விடுத்து தப்பினர். இதில் சித்ரா உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.. இது தொடர்பாக சித்ரா, சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில்சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி, செல் வக்குமார், சக்தி, அஸ்வின், காக்கமூர் பகுதியைசேர்ந்த வேலு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் மீது போக்சோவில் வழக்கு

குளச்சல், மார்ச் 30- புதுக்கடை அருகே கீழ்கு ளம் செந்தரை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (38). அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரு கிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறும் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த சசிகுமார் திடீரென சிறுமியிடம் தகாத வார்த்தை களை கூறி பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அங்கி ருந்து தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து வீட் டுக்கு வந்த தந்தை யிடம் கடைக்காரர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து கூறியுள்ளார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுமியின் தாய் இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பலசரக்கு கடைக் காரர் மீது போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பணிகளுக்கு வாடகைக்கார்களே பயன்படுத்த வேண்டும் குமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் வேண்டுகோள்

நாகர்கோவில்., மார்ச். 30- குமரி மாவட்டத்தில் நடக்கவிருக்கும் தேர்தல் பணிகளுக்கு வாடகை கார்களை யே பயன்படுத்த வேண்டும் என குமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் எஸ் பரமசிவன் தலைமையில் ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது, எங்களது சங்கத்தின் சி ஐ டி யு-ஏ ஐ ஆர் டி டபிள்யூ எப் மாநில, மாவட்ட நிர்வா கக்குழு கூட்ட முடிவின்படி வருகிற ஏப்ரல்23 அன்று நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கன்னி யாகுமரி மாவட்டத்தில் தங்கள் துறை மூலம் நடைபெறும் (கன்னியாகுமரி-229, நாகர்கோவில்-230, குளச்சல்-231, பத்ம நாபபுரம்-232, விளவங்கோடு-233, கிள்ளியூர்-234) சட்டமன்ற தொகுதிகளுக்கு தங்கள் துறை மூலம் இயக்கப்படும் தேர்தல் பணி வாகனங்களை வாடகை வாகனங்களாக இயக்க தாங்கள் உறுதி செய்ய கேட்டும், சொந்த பயன்பாட்டு வாக னங்கள் பயன்படுத்தப்பட்டால் தாங்கள் அதை இயக்க தடைசெய்ய கேட்டும், தேர்தல் பணி முடிந்த பிறகு வாகன கட்ட ணங்களை தங்கள் நேரடி பார்வையில் அனைவருக்கும் கிடைத்திட துறை மூலம் ஆணையிட கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக இது குறித்து மாநில தேர்தல் ஆணையரிடம் மார்ச் 16 அன்று மாநில நிர்வாக குழு சார்பில் நேரிடையாக மனு கொடுக்கப்பட்டுள்ளது. என தெரி வித்திருந்தனர்.

நிறுவனங்கள் முகவரியைக் குறிப்பிடுவது கட்டாயம் தென்காசி, மார்ச் 30- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-இன் போது தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைக்காக துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் அச்சடித்து வழங்கும் அச்சக நிறுவனங்கள், தாங்கள் அச்சடிக்கும் ஒவ்வொரு தேர்தல் துண்டுப்பிரசுரம் அல்லது சுவரொட்டியின் முகப்பிலும், அதனை அச்சிட்டவர் மற்றும் வெளியிட்டவரின் பெயர்களும் முகவரிகளும் இடம்பெற்றிருக்குமாறு அச்சடித்தல் வேண்டும். மேலும், அத்தகைய ஆவணம் அச்சிடப்பட்ட பிறகு, 48 மணி நேரத்திற்குள் வெளியிட்டவரின் விவரங்கள் குறித்த பிரகடனத்தின் ஒரு நகலை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். விதிகளை மீறும் அச்சக உரிமையார்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 127A-இன்படி ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையோ, ரூ.2000/- (இரண்டாயிரம் ரூபாய்) வரை அபராதமோ, அல்லது இவ்விரண்டுமோ சேர்த்து விதிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

நெல்லை டவுனில் நள்ளிரவில் பரபரப்பு தெருவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் திருநெல்வேலி, மார்ச் 30- நெல்லை டவுன் பகவத்சிங் தெருவில் ஏராளமான வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இந்த தெருவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கம் வீட்டில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். அப்போது தெருவில் பெட்ரோல் குண்டு வெடித்து பற்றி எரிந்து கொண்டிருந்தது. மேலும் அந்த வழியாக மர்ம நபர்கள் 2 பேர் தப்பி ஓடினர். உடனே அந்த பகுதி மக்கள் தீயை அணைத்த நிலையில், இதுகுறித்து உடனடியாக டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வை யிட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் கண்ணாடி துகள்கள் சிதறிக்கிடந்தன. இதனால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்து தீ வைத்து அந்த கும்பல் தெருவில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் இந்த பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. அவர்கள் போதை யில் இந்த சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டுக்குள் புகுந்து சிறுமியிடம் வாலிபர் அத்துமீறல் மானூர் அருகே நள்ளிரவில் பரபரப்பு திருநெல்வேலி, மார்ச் 30- நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த லட்சுமியா புரத்தை சேர்ந்த 28 வயது வாலிபர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கு தூங்கி கொண்டிருந்த 14 வயது சிறுமியிடம் அவர் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவிலேயே மானூர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த வாலிபர் தொடர்ந்து ஊருக்குள் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் அவரைப் பற்றி நெல்லை மாவட்ட போலீஸ் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விஷம் குடித்தவர் பலி இராஜபாளையம், மார்ச் 30- இராஜபாளையத்தை அடுத்த இளந்திரை கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி, விவ சாய வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இசக்கிராணி, பிரியா என்ற மகள்களும், முனியராஜ்(35) என்ற மகனும் உள்ள னர். இசக்கிராணி திருமணம் முடிந்து சென்றுவிட்டார். பிரியா படித்து முடித்து வேலைக்கு சென்று வருகிறார். முனியராஜ் கொத்தனார் வேலைக்கு செல்கிறார். இந்நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் முனியாண்டி, மனைவியின் 10 பவுன் நகையை அவ ரது மகன் முனியராஜ் பெயரில் வங்கியில் ஒரு லட்சத்திற்கு அடகு வைத்துள்ளார். இதற்கு அவரது மகளிடம் பணம் கொடுத்து ஒரு வருடத்திற்கு வட்டி கட்டி வந்துள்ளார். அதன்பின்பு வட்டி கட்டமுடியாமல் அவரது நகை ஏலத்திற்கு போனது. இதை முனியராஜ் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த முனியாண்டியும், அவரது மனைவியும் நகை யை திருப்பிக் கொடுக்க முனியராஜிடம் சத்தம் போட்டுள்ளனர். இதனால் கவலையடைந்த முனியராஜ், ஞாயிறன்று வாந்தி எடுத்துள்ளார். விசாரித்த போது தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரி சோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய

கன்னியாகுமரியில் கபடி களத்தில் தேர்தல் விழிப்புணர்வு

நாகர்கோவில், மார்ச் 30- கன்னியாகுமரி நகராட்சி நிர்வாகம் சார்பில் திரி வேணி சங்கமக் கடற்க ரைப் பகுதியில் நேற்று அதிகாலை முதலே மெகா தூய்மைப் பணி ; மேற்கொள்ளப்பட்டது. சுற்று லாப் பயணிகளையும் உள்ளூர் மக்களை யும் கவ ரும் வகையில் கடற்கரை மணற்பரப்பு முழுமையா கச் சுத்தப்படுத்தப்பட்டு, புதுப் பொலிவுடன் காட் சியளித்தது. தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து, வரும் தேர்தலில் 100%வாக் குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் விழிப் புணர்வு திருவிழா களை கட்டியது. தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்திய இந்தவிழாவில், இளைஞர் களை உற்சாகப்படுத்தும் விழிப் புணர்வு கபடிப் போட்டி நடைபெற்றது.வாக்களிப் பது நமது கடமை என்ற முழக்கத்துடன் வீரர்கள் கபடி களத்தில் ஆக்ரோஷ மாக மோதிக் கொண்டது, அங்கு திரண்டிருந்த சுற்று லாப் பயணிகளி டையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கபடிப் போட்டியின் இடைவேளையில், வாக் களிப்பதன் அவசியத்தை விளக்கும் வகையில் வண் ணமயமான கலைநிகழ்ச்சி கள் மற்றும் விழிப்புணர்வு நடனங்கள் அரங்கேறின. திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், ஒரு புறம் சுத்த மான கடற்கரையையும், மறு புறம் நாட்டுப்பற்றை ஊட்டும் தேர்தல் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளையும் கண்டு வியந்து பாராட்டிய துடன், தங்களது தேர்தல் உறுதி மொழி யையும் எடுத்துக் கொண்டனர்.

மார்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

மார்த்தாண்டம்,மார்ச் 30- மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி அரபுர விளை நேசர்புரம் பகுதியை சேர்ந்தவர் பினோ. அவரது மனைவி ராஜஷீலா (36). இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திரு மணமான சில நாட்களிலேயே பினோ இறந்து விட்டார். தற்போது ராஜஷீலா எம்.ஏ. பி.எட் முடித்துவிட்டு ஆந்திராவில் எல்எல்பி படித்து வருகிறார். இந்த நிலையில் கணவருக்கு சொந்தமான 8 சென்ட் நிலம் நட்டாலத் தில் உள்ளதாக தெரிகிறது. அந்த நிலத்தை பராமரிக்க முயன்றதற்கு கண வரின் தாய்மாமனான ஜெயகு மார், அவரது மனைவி தங்கம் ஆகியோர் எதிர்ப்பு தெரி வித்தனர். சம்பவத்தன்று ராஜஷீலாவிடம் தகராறில் ஈடுபட்ட ஜெய குமார் கைகளால் தாக்கி துப் பட்டாவை இழுத்து கீழே தள்ளினார். கொலை மிரட்டல் விடுத் த தம்பதி மீது வழக்குப்ப திவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 9 - கேரளம், புதுச்சேரி தேர்தல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை தொழிலக பாதுகாப்பு அதிகாரி தகவல்

திருநெல்வேலி, மார்ச் 30- கேரளம் மற்றும் புதுச்சேரி யில் வருகிற 9- ஆம் தேதி சட்ட சபை தேர்தல் நடக்க உள்ள தால் அன்றைய தினம் வாக்க ளிக்க தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என நெல்லை தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் இரா.விமலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரளம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 9-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135-யின் அடிப்ப டையில் தேர்தல் நாளன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக கேரள மாநிலம் மற்றும் புதுச்சேரி ‘யூனி யன்பிரதேசத்தில் வாக்குரிமை உள்ள நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பணிகளில் பணிபுரியும் அனைத்து வகை யான தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடு முறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப் படுகிறது. மேலும் தொழிற்சாலை கள் மற்றும் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பணிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் விடுமுறை குறித்து புகார்கள் ஏதுமிருப்பின் தங்களது புகார்களை தெரிவிக்க ஏது வாக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் நெல்லை மாவட்டம்- 75984 64442, 9487422047, 9750676053, தென் காசி -9176153656, 8870555737, 97506760 53, 5 மாவட்டம்- 75984 64442, 8903182584, 9715218059, தூத்துக்குடி மாவட்டம்-9443764310. 9790019373, 63795711 06, 9384211880, 9715218 059 ஆகிய செல்போன் எண்க ளில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான நிர்வாகத்தினர் எவ்வித புகார்களுக்கும் இட மளிக்காமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரி விக்கப்படுகிறது இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.