முந்தய பக்கம்

தோவாளை மலர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு கோல கண்காட்சி

11 Apr 2026, 5:30 am
தோவாளை மலர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு கோல கண்காட்சி

தோவாளை மலர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு கோல கண்காட்சி

நாகர்கோவில், ஏப்.10- கன்னியாகுமரி மாவட்ட வகை வளர்ச்சி முகமை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் ஏப்ரல் 10 அன்று தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை நகராட்சிக்குட்பட்ட மலர் சந்தை வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் வண்ண மலர்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கோல கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இத்தேர்தல் விழிப்புணர்வு கோல கண்காட்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி. ஆர். அழகுமீனா, கலந்து கொண்டு, பொதுமக்களுடன் வாக்காளர் உறுதிமொழியினை ஏற்று உரையாற்றினார். மலர் சந்தை வளாகத்தில் வண்ணமயமான மலர்களால் தேர்தல் இலச்சினையான தேனி மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஜனநாயகக் கடமையான வாக்களிப்பதன் அவசியத்தை ஒவ்வொரு வீடிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும், வாக்குரிமைபெற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram