தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் அறிக்கை - 2026

12 Apr 2026, 5:30 am
தேர்தல் அறிக்கை -  2026

தேர்தல் அறிக்கை - 2026

அமைக்க, பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வறை வசதிகள் கட்டாயப்படுத்தக் கோ

33. தகவல் தொடர்பு துறை ஊ

AI தொழில்நுட்பம் வேலைவாய்ப்பில் தாக்கங்களை ஆய்வு செய்து தொழிலாளர் நலன் வகுக்க, வாரம் 5 நாள்-நாளொன்றுக்கு 7 மணி நேர வேலை, அலுவல் நேரத்திற்கு பின் தொடர்பைத் துண்டிக்கும் உரிமை, கட்டாய வேலை விலக்கல் தடை, மின்னணு கண்காணிப்புத் தடை, பெண்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு, SEZ-IT பூங்காக்களில் குழந்தைகள் காப்பக வசதி ஆகியவற்றை கட்டாயப்படுத்த

34. இ-சேவை ஊழியர்

பல ஆண்டுகளாக அரசு இ-சேவை மையங்களிலும், ஆதார் சேவை மையங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.26,000 ஊதியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ESI பிடித்தம் செய்திட, அரசு ஊழியர்கஓய்வறை வசதிகள் கட்டாயப்படுத்தக் கோரும். 33. தகவல் தொடர்பு துறை ஊழியர்கள் AI தொழில்நுட்பம் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆய்வு செய்து தொழிலாளர் நல கொள்கை வகுக்க, வாரம் 5 நாள்-நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை, அலுவல் நேரத்திற்கு பின் தொடர்பை துண்டிக்கும் உரிமை, கட்டாய வேலை விலக்கல் தடை, பணியிட கண்காணிப்புத் தடை, பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு, SEZ-IT பூங்காக்களில் குழந்தை காப்பக வசதி ஆகியவற்றை கட்டாயப்படுத்தக் கோரும். 34. இ-சேவை ஊழியர்கள் பல ஆண்டுகளாக அரசு இ-சேவை மையங்களிலும் ஆதார் சேவை மையங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க, அதுவரை குறைந்தபட்சம் ரூ.26,000 ஊதியம் உறுதிப்படுத்த, PF-ESI பிடித்தம் செய்திட, அரசு ஊழியர்களைப் போல் விடுமுறை-போனஸ் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் இத்தொழிலாளர்களுக்கும் வழங்கிட வலியுறுத்தும். 35. போதை மற்றும் மது எதிர்ப்பு தமிழ்நாட்டில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது, மது ஒழிப்பிற்கு தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வது, குடிநோயாளிகள் சிகிச்சை மையங்களை அதிகரிப்பது, மது உற்பத்தி ஆலைகளுக்கு உச்சவரம்பு விதிப்பது, போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர்-உறுதுணை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும், போதை எதிர்ப்பு விழிப்புணர்வை பரப்பவும் தீவிர முன்னெடுப்புகள் மேற்கொள்ளும். 36. பெண்கள் நலன் சட்டமன்றம்-நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த, குடும்ப வன்முறையைத் தடுக்க மாவட்டந்தோறும் பாதுகாப்பு அதிகாரிகள், பாலியல் வன்முறை பாதிக்கப்பட்டோருக்கு ஒரே இடத்தில் அனைத்து உதவிகளும் (One-Stop Centre), கிடைக்க நலிந்தோர் பெண்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை, பாலின பட்ஜெட்டை 33% ஆக உயர்த்த, மக்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை-திரைக்காட்சிகளைத் தடை செய்ய, பெண்கள் மீதான வன்முறை வழக்குகளை 6 மா தத்தில் தீர்க்க தனி நீதிமன்றங்கள் அமைக்கக் கோரும். 37. இளைஞர் நலன் இளைஞர் மேம்பாட்டு ஆணையம் அமைக்க, சட்டமன்ற தொகுதிவாரியாக இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை, நகர்ப்புற வேலை உறுதிச்சட்டம், டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழிற்சாலைகள், தென் மாவட்டங்களில் புதிய ICT Parks, வேலையில்லா கால நிவாரணம் ரூ.3,000, சேது கால்வாய் திட்டத்தை அமல்படுத்த, விளையாட்டு-உடற்பயிற்சி மையங்கள் அமைக்கக் கோரும். 38. வேலைவாய்ப்பு அனைத்து அரசு காலிப்பணியிடங்களையும் போட்டித்தேர்வு மூலம் நிரப்ப, மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப புதிய பணியிடங்கள் உருவாக்க, TNPSC போன்ற அமைப்புகளில் ஊழல் இல்லாது வெளிப்படையான தேர்வு, காலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிட, மாவட்டவாரியாக வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைக்க, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, அந்தந்த மாநில தொழிலாளர்களுக்கு வேலை யில் குறிப்பிட்ட சதவிகிதம் உறுதி செய்யக் கோரும். 39. குழந்தைகள் நலன் குழந்தைகள்-பெண்கள் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க, போக்சோ (POCSO) சட்டத்தை முறையாக அமல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள், குழந்தை திருமணத்தைத் தடுக்க தனி அதிகாரி நியமனம், ஊட்டச்சத்து மையங்களை அதிகரிக்க, கல்வி நிலையங்களில் ஆலோசகர்களை நியமிக்க, கிராம அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்க, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கக் கோரும். 40. மாணவர் நலன் விடுதி மாணவர்களின் உணவுப்படியை உயர்த்த, ஒன்றிய அரசு கைவிட்ட சிறுபான்மை கல்வி உதவித்தொகை தொடர வலியுறுத்த, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்ற, அனைத்துக் கல்லூரிகளிலும் தேர்தல் மூலம் மாணவர் பேரவை அமைக்க, ஒற்றைச்சாளரச் சேர்க்கை முறை, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், அசைவ உணவு வகைகளும் சத்தணவு திட்டத்தில் சேர்க்க, ரோகித் வெமுலா சட்டத்தை அமல்படுத்தக் கோரும். 41. கல்வி ஓபன்சோர்ஸ்-கட்டற்ற மென்பொருள் கல்வியை பள்ளி அளவிலேயே அறிமுகப்படுத்த, அரசு கல்வி நிறுவனங்களில் இலவச WiFi, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிலுவை CAS முழுவதும் வழங்க, சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு UGC ஊதியம்-பணிப்பாதுகாப்புக்கு தனிச் சட்டம், மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பாதுகாக்க, கேரளம் போல் ஆரம்பப் பள்ளிகளை வலுப்படுத்த, நீட் விலக்குக்கு சட்ட-அரசியல் போராட்டம் தொடரக்கோரும். 42. சுகாதாரம் தமிழ்நாடு மருத்துவ சேவை உரிமைச் சட்டம் கொண்டுவர, GSDP-இல் 8% சுகாதாரத்திற்கு ஒதுக்க, அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு அட்டை இல்லாமல் சிகிச்சை கிடைக்க, PPP திட்டங்கள் கைவிட, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி வரை காலிப்பணியிடங்கள் நிரப்ப, ESI மருத்துவமனைகள் முழுதிறனில் செயல்பட நிதியை அதிகரிக்க, மனநல சேவைகளை விரிவாக்க, தாது கனிம அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்யக் கோரும். 43. பொது விநியோகம் அனைவருக்குமான (targeting - இலக்கு நிர்ணயம் செய்யாத) பொது விநியோகத் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை வலுவாக எதிர்த்து, அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வழங்க, வெளிச்சந்தை விலையைக் கட்டுப்படுத்த, மாநிலங்களின் தேவைக்கேற்ப மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க, கேரளம் போல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் திட்டத்தை விரிவாக்க வலியுறுத்தும். 44. சுற்றுச்சூழல் குடியிருப்புப் பகுதிகளருகில் ரசாயன-மாசுத் தொழிற்சாலைகள் அமைப்பதை தடை செய்ய, நகரங்களில் சிறப்புச் சூழலியல் திட்டத்தை உருவாக்க, இயற்கை முறையில் திடக்கழிவு மேலாண்மை, உயிரி வாயு மையங்கள் உருவாக்க, மழைநீர் வடிகால் தொடர் பராமரிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த சிறப்புத் திட்டங்கள், அடையாறு ஆற்றை சீரமைக்க மக்கள் கருத்தறிந்து செயல்படுத்த, சுற்றுச்சூழல் பூங்காக்கள் நகரங்களில் அமைக்க வலியுறுத்தும். 45. இலங்கை தமிழர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை தமிழர்களை சேர்க்க, தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு கோரினால் குடியுரிமை வழங்க, இலங்கையில் தமிழர் வாழ்வுரிமை-அரசியல் சட்ட உரிமைகள் பாதுகாக்கத் தொடர்ந்து வலியுறுத்த, உலகம் பலவிடங்களில் உள்ள தமிழக இளைஞர்களின் அறிவுசார் பங்களிப்பை தமிழகம் பயன்படுத்திட ஏற்பாடுகள் செய்யக்கோரும். 46. அகதிகள் முகாம் இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட தொடர்ந்து குரல் கொடுக்கும் சிபிஐ(எம்), தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் குடிநீர்-சுகாதாரம்-கல்வி-மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அகதிக் குழந்தைகள் கல்வி பெறுவதிலும் வேலைவாய்ப்பு பெறுவதிலும் உரிய கவனம் செலுத்திடக் குரலெழுப்பும். 47. போக்குவரத்து அரசு போக்குவரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை கைவிட, போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த, வருவாய்-செலவு வித்தியாசத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளை நிரந்தர ஊழியர்களுடன் இயக்க, நெடுஞ்சாலை சுங்கக் கட்டணத்தை வரன்முறைக்குட்பட்டதாக மாற்ற, ஆண்டுக் காண்டு உயர்த்தப்படும் கட்டணத்தை எதிர்க்க வலியுறுத்தும். 48. எரிசக்தி தமிழ்நாடு மின்சார வாரியத்தை மாநில கட்டுப்பாட்டில் சேவைத்துறையாக வைக்க, மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2025-ஐ ஏற்க மறுத்து எதிர்க்க, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்-ஒரு விளக்கு திட்டம்-வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம் தொடர, காற்று-சூரிய மின்சார உற்பத்தி விரிவாக்க, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மின்வாரியமே செய்திட, அணுமின் உற்பத்தி யை தனியாரிடம் தரும் சட்டத்தை எதிர்க்கக் கோரும். 49. பொதுத்துறைப் பாதுகாப்பு தமிழ்நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்து லாபகரமாக இயக்கி விரிவுபடுத்த, பொருளாதார முதுகெலும்பான பொதுத்துறைகளை வேகமாக தனியாரிடம் ஒப்படைப்பதைத் தடுக்க, காப்பீட்டுத் துறையில் 100% FDI ரத்து செய்ய, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார்மயமாவதை எதிர்க்க, ரயில்வே-மின்சாரம் தனியார்மயமாவதை தடுக்க, நலிவடையும் மாநில பொதுத்துறை நிறுவனங் களை கேரளம் போல் அரசே மேம்படுத்திடக் கோரும். 50. நகர்ப்புற வளர்ச்சி கார்ப்பரேட் நலன்கள் சார்ந்த நகர்மயமாதல் கொள்கைகளை எதிர்த்து, உழைக்கும் மக்களின் வாழ்வாதார நலன்களை மையமாகக்கொண்ட நகர்ப்புற வளர்ச்சிக்கு குரல் கொடுக்கும். ஆண்டு 6% சொத்து வரி உயர்வை எதிர்க்க, குடிசைவாழ் மக்களை அருகிலேயே மாற்றியமைக்க, சென்னை-மதுரை-கோவை மெட்ரோ விரிவாக்கத்திற்கு ஒன்றிய நிதி கோர, நகர்ப்புற ஏரிகள்-குளங்களை பாதுகாக்க, சைக்கிள்-நடைபயிற்சி பாதைகள் உருவாக்க வலியுறுத்தும். 51. உள்ளாட்சி கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சிகளுக்கு தனி நிதி-கூடுதல் அதிகாரம் வழங்க, கிராம சபைகளில் மக்கள் பங்கேற்புடன் வரவு-செலவு சமூக தணிக்கை, பட்ஜெட்டில் 30% நிதி உள்ளாட்சிகளுக்கு, ஊராட்சிச் செயலாளர்கள்-துப்புரவுத் தொழிலாளர்கள்-குடிநீர் மோட்டார் இயக்குநர்களை நிரந்தரப்படுத்த, உள்ளாட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்த, குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் வைக்கக் கோரும். 52. நிலம் மற்றும் குடிமனைப் பட்டா நகர்ப்புறத்தில் இலவச குடிமனைப் பட்டா வழங்க, கிராம நத்தம்-நத்தப்புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்கும் அரசாணை தொடர, மற்ற வகை புறம்போக்கு களையும் வகை மாற்றம் செய்ய, நிலமற்ற கூலித் தொழி லாளர்களுக்கு குடும்பத்திற்கு தலா 1 ஏக்கர் நிலம் வழங்க, நீர்நிலை-வாய்க்கால் நிலங்களை ஆய்வு செய்து மறு வகைப்படுத்தி பட்டா வழங்க, தனியார் தோட்ட நிலங்களில் வாழ்வோருக்கு இலவசப்பட்டா வழங்கக் கோரும். 53. நுண் நிதி நிறுவனங்கள் நுண்நிதி நிறுவனங்களின் அத்துமீறல்களை தடுக்கும் சட்ட விதிமுறைகளை உடனடியாக அமலாக்க, பெண்களிடையே விழிப்புணர்வைப் பரப்ப சிறப்பு முயற்சிகள் எடுக்க, உதவி எண் அல்லது செயலி கொண்டுவர, கூட்டுறவு வங்கி மற்றும் அரசுசார் கடன் வசதிகள் வழங்கி நுண்நிதி நிறுவனங்களின் கடன் வலைப்பின்னலிலிருந்து எளிய மக்களை விடுவிக்க, தொடர்ந்து குரல் கொடுக்கும். 54. கூட்டுறவு இயக்கம் கூட்டுறவைச் சீர்குலைக்கும் மோடி அரசின் தனி அமைச்சகம் வழியாக மாநில கூட்டுறவை கட்டுப்படுத்தும் முயற்சிகளை எதிர்க்க, மாவட்ட-மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’ உருவாக்க, விவசாய-சிறு வணிக-மகளிர் தொழில் கடன்களை எளிமையாக வழங்க, 97ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் அடிப்படையில் ஜனநாயகப்பூர்வமான கூட்டுறவுத் தேர்தலை நடத்த வலியுறுத்தும். 55. கூட்டுறவு ஊழியர்கள் நலன் கூட்டுறவுப் பஞ்சாலைகள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் தொகுப்பூதியம்-மதிப்பூதியம் பெறும் ஊழியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட, போனஸ் சட்டப்படி வழங்க, அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவக் காப்பீடு-குடும்ப நல நிதி, ஒருங்கிணைந்த PF-குழுக்காப்பீடு-கருணை ஓய்வூதி யத் திட்டம் அமல்படுத்த, நீண்டகால பணிவரன்முறைப் படுத்தல் நிலுவை தீர்க்க வலியுறுத்தும். 56. மனித உரிமைகள் காவல் மரணங்கள்-சித்ரவதைகளைத் தடுக்க, காவல்நிலையப் புகார்கள் மீது விரைவான நடவடிக்கையை உறுதி செய்ய, மனித உரிமை-குழந்தைகள் உரிமை-சிறு பான்மையினர்-மகளிர் ஆணையங்களில் காலிப்பணி யிடங்களை நிரப்ப, சிறையில் மனித மாண்பு காக்க, விசாரணை இல்லாமல் வாடும் கைதிகளுக்கு நீதி வழங்க, அனைத்துக் கல்லூரிகளிலும் மனித உரிமைக் கல்வி, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக் கோரும். 57. அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் நலன் 10% பிடித்தத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்க, தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழகத்தில் அமல்படுத்தாமல் தடுக்க, இடைநிலை-முதுநிலை ஆசிரியர்களிடையே ஊதிய முரண்பாடு நீக்க, 1 லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் GO 243 ரத்து செய்ய, கௌரவ விரிவுரை யாளர்களின் ஊதியம் நீதிமன்ற தீர்ப்பின்படி உயர்த்த, சுய நிதிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு தனிச்சட்டம் கோரும். 58. ஓய்வூதியர் நலன் 10% பிடித்தத்தைக் கைவிட, மின்சாரம்-போக்குவரத்து போன்ற மாநில பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்களுக்கும் சம பலன்கள் வழங்க, அனைத்துத் துறை ஓய்வூதியர்களுக்கும் ஒரே மாதிரியான பலன்களை உறுதி செய்ய, அரசு அறிவித்த மருத்துவத் திட்டத்தை நிறுவனங்களே நேரடியாக வழங்க, ஓய்வூதியர் இறந்த பின்னரும் கைம்பெண்-விவாகரத்தான மகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் தர வலியுறுத்தும். 59. மீனவர் நலன் தமிழக - இலங்கை மீனவர்களிடையே சுமூக உறவுக்கு ஆண்டுக்கு இரு முறை மாநில அரசும் பங்கேற்கும் பேச்சுவார்த்தை, 60 வயது மீனவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், கடலோர மேலாண்மை மண்டல ஆணை ரத்து, குடியிருப்புக்கு நிலப்பட்டா, பன்னாட்டு மீன்பிடிக் கப்பல் உரிமையைத் திரும்பப் பெற, வலைகளுக்கு முழு மானியம், தடைகாலத்தில் ரூ.500 x 61 நாள் நிவாரணம், மீனவ இளைஞர்களுக்கு கப்பல் துறை வேலைவாய்ப்பு பயிற்சி கோரும். 60. சமூக சீர்திருத்தத்துறை சமூக சீர்திருத்தத் துறையை மீண்டும் கொண்டுவந்து சாதி-பாலினப் பாகுபாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்ப, குறும்படங்கள்-கலை விழாக்கள் மூலம் சமூக நீதி செய்தியை விரிவாக்க, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற, போதை எதிர்ப்பு பிரச்சாரத்தை வலுப்படுத்த, உரிய நிதி ஒதுக்கீட்டுடன் இத்துறை தீவிரமாகச் செயல்பட வலியுறுத்தும். 61. பட்டியல் - பழங்குடி மக்களின் நலன் மக்கள்தொகைக்கேற்ப கல்வி-வேலை இட ஒதுக்கீடு அதிகரிக்க, நிலச் சீர்திருத்தம் மூலம் நிலம் வழங்க, பஞ்சமி நிலங்கள் சட்டரீதியாக நிலைநாட்ட, SC/ST வன்கொடுமைச் சட்டத்தை கறாராக அமல்படுத்த, சாதிய ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம், வன உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்த, சமவெளியில் பழங்குடி குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம், தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தக் கோரும். 62. சிறுபான்மையினர் நலன் தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் சமூகத்தில் சேர்க்க, ரங்கநாத் மிஸ்ரா-சச்சார் ஆணைய பரிந்துரை களை முழுமையாக அமல்படுத்த, நீண்ட காலம் விசார ணையின்றி சிறையிலுள்ள முஸ்லீம் கைதிகளை விடு விக்க, சிறுபான்மை கல்வி நிறுவன அரசியல் சட்ட உரிமை களைப் பாதுகாக்க, அடக்க ஸ்தலங்கள் மக்கள்தொகைக் கேற்ப அரசே உருவாக்க, சிறுபான்மையினர் ஆணையத்தை வலுப்படுத்தக் கோரும். 63. மாற்றுத்திறனாளிகள் நலன் 2016 சட்டப்படி அனைத்திடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகத்தக்கதாக மாற்ற, அரசில் 4%-தனியாரில் 5% இட ஒதுக்கீடு உறுதிசெய்ய, உதவித்தொகை ரூ.6,000 ஆக உயர்த்த, UDID அட்டை ஓராண்டில் அனைவருக்கும் வழங்க, பாதுகாப்பற்ற பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டவாரியாக பாதுகாப்பு இல்லங்கள், வங்கிக் கடன் நடைமுறை எளிதாக்க, உதவி உபகரணங்கள் இலவசமாக அரசே வழங்க, சொந்த வீடில்லாதோருக்கு முன்னுரிமையில் வீடு கட்டிக் கொடுக்கக் கோரும். 64. பால் பன்மையினர் நலன் (LGBTQIA+) பாலின அடையாளம் தாமாகத் தீர்மானிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்ட, ஒன்றிய அரசின் சட்டத் திருத்தத்தை எதிர்க்க, திருநர்களுக்கு கல்வி-வேலை இட ஒதுக்கீடு, மாவட்டவாரியாக தங்குமிடங்கள், அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள், பால்மாற்று அறுவைச் சிகிச்சை காப்பீட்டில் சேர்க்க, வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை, 2019 திருநர் சட்டப்படி மருத்துவமனைகளில் புகார் செல் அமைக்கக் கோரும். 65. தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு காடுகள்-கடல்-ஆறுகள்-வனவிலங்குகள் பாதுகாப்பதை முக்கியக் கடமையாகக் கொண்ட சிபிஐ(எம்), மரங்கள் கண்மூடித்தனமாக வெட்டுவதை தடுக்க, மணல் கொள்ளை-நீர்நிலை மாசு-கடல் கழிவு கொட்டல் நிறுத்த, ஏரிகள்-கண்மாய்களை ஆண்டுதோறும் தூர்வார, தாவர மரபணு வளங்கள் பாதுகாக்க, தமிழகத்தின் கனிம-கடலோர வளங்களை பொறுப்புடன் பயன்படுத்த, நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய வலியுறுத்தும். 66. பத்திரிகையாளர் நலன் தற்போதுள்ள பத்திரிகையாளர் நல வாரியத்தில் ஊரகப் பத்திரிகையாளர் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்து அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஆணையமாக மேம்படுத்த, ஓய்வூதிய விதிகள் எளிதாக்க, பணியில் மரணமடைந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி பாகுபாடின்றி வழங்க, சிறுபத்திரிகைகளுக்கு நிறுத்தி வைத்துள்ள அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க, தபால்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரும். 67. விளையாட்டு வார்டுவாரியாக கட்டணமற்ற Turf மைதானங்கள் உருவாக்க, இளம்பெண்களுக்கு பிரத்யேக விளையாட்டு மைதானங்கள், பால் பன்மையினர் உட்பட அனைவருக்கும் சம வாய்ப்பு-பயிற்சி, நடைபயிற்சி பாதைகள்-உள்-வெளி அரங்கங்கள்-பொதுப் பூங்காக்கள், கார்ப்பரேட் கொள்ளை லாபத்திற்கு மாறாக அரசின் சார்பில் தீம் பார்க்-பொழுது போக்கு மையங்கள் உருவாக்க, குழந்தைகள் விளை யாட்டுத் திறன் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி வழங்க வலியுறுத்தும். 68. இணையம் இணைய அணுகலை அடிப்படை உரிமையாகச் சட்டமியற்ற, அனைவருக்கும் இலவச இணைய அணுகல், டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு சரிசெய்ய, பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் தடுக்க கடும் நடவடிக்கை, சைபர் துறை வலுப்படுத்த, சமூக வலைத்தளங்கள் தனிநபர் தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்தவதை தடுக்க, IT சட்டம் 69A பயன்படுத்தி ஜனநாய கக் குரல்களை ஒடுக்குவதை எதிர்க்கக் கோரும். 69. கலை, இலக்கியம் அரசு நாட்டுடமையான படைப்புகளை பாட நூல் நிறுவனம் மூலம் மலிவு விலையில் வெளியிட, மதவெறி அமைப்புகளின் ஊடுருவல் தடுக்க மதச்சார்பற்ற கலை-இலக்கிய மன்றங்கள் வலுப்படுத்த, நாடகம்-இசை-நுண்கலை பாடவேளைகள் பள்ளிகளில் ஏற்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் கவின்கலைக் கல்லூரிகள், குறைந்த வாடகையில் பொது மாநாட்டு அரங்கங்கள், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பேருந்து கட்டணச் சலுகை, அழிந்துவரும் கலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை கோரும். 70. சிறார் இலக்கியம் சிறார் கலை இலக்கிய கழகம் துவக்க, பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சிறார் இலக்கியத்தைச் சேர்க்க, பள்ளி நூலகங்களில் குழந்தை மைய நூலகப் பிரிவுகளை உருவாக்க, மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் சிறார் நூல்களுக்கு தனி அரங்கு, மாவட்டவாரியாக தனியாக சிறார் நூலகங்கள் அமைக்க, புத்தகத் திருவிழாக்களை அறிவுத் திருவிழாக்களாக முன்னெடுக்கக் கோரும். 71. நூலகம் மாவட்ட-வட்ட தலைநகர் அரசு நூலகங்களை உயர் தொழில்நுட்பத்துடன் கணினிமயமாக்க, போட்டித் தேர்வு தயாரிப்புக்கு உகந்த கட்டமைப்பு, கிராம ஊராட்சி நூலகங்களை காலை-மாலை திறந்து வைக்க, பேருந்து நிலையங்களில் புத்தகக்கடை எண்ணிக்கை இரட்டிப்பாக்க, வாசிப்புப் பழக்கம் ஊக்குவிக்க வாரம் ஒரு நூலக இடைவேளை, நகர்ப்புறங்களில் புத்தக பூங்காக்கள், உள்ளாட்சி நூலக வரியை நூலக மேம்பாட்டிற்கே பயன்படுத்தக் கோரும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.