ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்த மூதாட்டி
20 Jul 2026, 11:30 pm
<p><strong>ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்த மூதாட்டி</strong></p><p>சேலம், ஜூலை 20- சங்ககிரி அருகே கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், அரசு விழாவை வேடிக்கை பார்க்க வந்த மூதாட்டியை அழைத்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ரிப்பன் வெட்ட வைத்து திறக்கச்செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பனூர் பைபாஸ் பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, அரசு நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்திருந்த மூதாட்டியை அமைச்சர் கைப்பிடித்து அழைத்து வந்து, அவரை ரிப்பன் வெட்டி புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறக்க வைத்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.</p>
