பொங்கல் வைத்து கொண்டாடிய முதியவர்கள்
5 Mar 2026, 3:59 pm
<p><strong>பொங்கல் வைத்து கொண்டாடிய முதியவர்கள்</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 5- குமாரபாளையம் அருகே முதி யோர் உதவித்தொகை ரூ.1200 உடன் கோடைகால உதவி தொகை சேர்த்து வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரி விக்கும் வகையில் முதியோர்கள் பொங் கல் வைத்து கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் அருகே உள்ள அருவக்காடு ஜே ஜே நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள 30க்கும் மேற் பட்ட முதியோர்களுக்கு மாதம் தோறும் தமி ழக அரசின் முதியோர் உதவித்தொகை ரூ.1200 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமி ழக அரசு இந்த மாதம் மாதாந்திர உதவித் தொகை 1200 ரூபாயுடன் கோடைகால உத வித் தொகையாக 2000 ரூபாய் சேர்த்து 3200 ரூபாய் வங்கிகள் மூலம் வழங்கப்பட் டுள்ளது. இதற்கு தமிழக முதல்வருக்கும், அர சுக்கும் நன்றி செலுத்தும் விதமாக புதனன்று இரவு ஒன்று கூடிய முதியவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞர் படம் வைத்து, பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கி மகிழ்ச்சி யடைந்தனர்.</p>
