தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

20 Jan 2026, 5:19 pm
சென்னை விரைவு செய்திகள்

முதியவர் மயங்கி விழுந்து பலி

சென்னை, ஜன.20- சென்னை வடபழனி விஜயசாந்தி குடியிருப்பைச் சேர்ந்த சினிமா கதாசிரியர் கணேஷ் ராஜா (80), வயது மூப்பு காரணமாகத் தனது மகனுடன் வசித்து வந்தார். பொங்கல் பண்டி கைக்காகத் தனது மகன் பெங்களூரு சென்றிருந்த நிலையில், குன்றத்தூரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்த கணேஷ் ராஜா, திங்களன்று  காலை பேருந்து மூலம் வடபழனி திரும்பினார். அப்போது வடபழனி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்குச் சென்ற அவர், எதிர்பாராத விதமாகத் திடீரென மயங்கிச் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வடபழனி போலீ சார் நடத்திய சோதனை யில், அவரிடம் இதய நோய்க்கான மாத்திரை கள் இருந்தது கண்டறி யப்பட்டது.  இதையடுத்து அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்ப வம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 2 நாள்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

சென்னை, ஜன. 20- சென்னையில் 2 நாள்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்த த்தின் கீழ் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்க கால அவ காசம் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்ட மன்றத் தொகுதிகளில் தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக வருகிற 24ஆம் தேதி சனிக்கிழமை (ஜன.25),ஞாயிறு(ஜன.26) ஆகிய நாட்களில்  4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறும். முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத நபர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படி வத்துடன் சமர்ப்பித்து தங்க ளது பெயரை சேர்க்க விண்ணப்பிக்க லாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரி விக்க அல்லது ஏற்கெனவே உள்ள பெயரை நீக்க படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றுதல், திருத்தம் செய்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்கா ளர்கள் என குறிப்பது போன்ற வற்றை படிவம் 8ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அலுவல கக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 1.38 லட்சம் வாகனங்கள் பதிவு

வேலூர், ஜன.20- வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,38,150 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 1.12 லட்சம் இருசக்கர வாகனங்களும், சொந்த பயன்பாட்டிற்கான 13,238 நான்கு சக்கர வாக னங்களும், 9,551 பொதுப் போக்குவரத்து வாகனங்க ளும் அடங்கும். இது தவிர, தகுதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் ஓட்டு நர் உரிமம் புதுப்பித்தல் போன்ற பணிகளும் தடை யின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நடப்பு 2026-ஆம் ஆண்டு ஜன வரி மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வாக னங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். தங்கம் விலை உயர்வு சென்னை, ஜன.20- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,610-க்கும் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ.330-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 12,000 உயர்ந்து ரூ.3.30 லட்சத்துக்கும் விற்பனை யானது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.