தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இளவேனில் வாலறிவனின் பொன்னான சாதனை!

21 Sept 2026, 9:20 pm
இளவேனில் வாலறிவனின்  பொன்னான சாதனை!

இளவேனில் வாலறிவனின் பொன்னான சாதனை!

ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், இந்தியாவின் சார்பில் களமிறங்கிய வீராங்கனைகள் நாட்டின் பெருமையை உலக அரங்கில்உயர்த்திப் பிடித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் முன்னணி வீராங்கனையான இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைபில் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளதுடன், இரண்டுவெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குபெருமை சேர்த்துள்ளார். போட்டி தொடங்கிய முதல் நாளின் தொடக்கத்திலேயே இந்தியா தனது பதக்கக்கணக்கைத் தொடங்க இளவேனில் முக்கியக் காரணமாகத் திகழ்ந்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் புதல்வி என்பது பெருமிதம் அளிக்கிறது.

போட்டியின் ஆரம்பம் முதலே தனது அபாரமான இலக்குத் திறனால் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இளவேனில், இறுதிப் பகுதியில் ஏற்பட்ட மிகச்சிறிய கவனச்சிதறல் மற்றும் பதற்றத்தின் காரணமாக தங்கம்வெல்லும் வாய்ப்பினை மிக அருகில் தவறவிட்டுவெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேர்ந்தது. இறுதிச் சுற்றில் 252.4 புள்ளிகளைக் குவித்த அவர், ஜப்பானின்ஹினாட்டா தனிகிஎன்பவரிடம் மிகக் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டாலும், உலகத் தரம் வாய்ந்த பல முன்னனி வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி அவர் பெற்ற இந்தவெற்றி சாதாரணமானதல்ல. குறிப்பாக, ஒலிம்பிக் சாம்பியன்கள் மற்றும் உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள வீராங்கனைகள் களமாடிய இந்தப் போட்டியில், ளவேனில்காட்டியஉறுதியும் திறனும் பாராட்டுக்குரியதாகும்.

இளவேனிலுடன் இணைந்து சோனம்மஸ்கார் மற்றும் விதர்சா கே. வினோத் ஆகியோரும் துப்பாக்கிச் சுடுதல் அணிகள் பிரிவில் இந்தியாவின் கணக்கைத் திறக்க தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கியுள்ளனர். விதர்சாவின் விடாமுயற்சியும், சோனமின் திறமையும் இந்திய அணியின் பலத்தை நிரூபித்துள்ளன. கிராமப்புற பின்னணியில் இருந்து வந்து, பல்வேறு தடைகளையும் சுய சந்தேகங்களையும் தாண்டி சர்வதேச அரங்கில் சாதித்துக் காட்டியுள்ள இளவேனில் உள்ளிட்ட இந்த வீராங்கனைகளின்பயணம், நாட்டின் இளம் தலைமுறையினருக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகும். விளையாட்டுத் துறையில் முறையான வசதிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்டால், இந்தியாவின் பாட்டாளிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்து இளஞர்கள் உலக அளவில்எந்த உயரத்தையும் தொட முடியும் என்பதை இவர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக முதல் வெற்றியைப் பதிவு செய்து,நாட்டின் புகழை உச்சிக்குக் கொண்டு சேர்த்துள்ள இளவேனிலுக்கு வாழ்த்துகள்! பிற பிரிவுகளிலும்சாதனைகளைத் துவக்கியுள்ள வீரர்களும் வெல்லட்டும்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.