தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எல் நினோ அச்சுறுத்தலால் தெற்காசியாவில் சராசரிக்கும் குறைவாகவே பருவமழை பெய்யும்

7 May 2026, 8:49 pm
எல் நினோ அச்சுறுத்தலால் தெற்காசியாவில்  சராசரிக்கும் குறைவாகவே பருவமழை பெய்யும்

எல் நினோ அச்சுறுத்தலால் தெற்காசியாவில் சராசரிக்கும் குறைவாகவே பருவமழை பெய்யும்

காலநிலை அவுட்லுக் போரம் எச்சரிக்கை

எல் நினோ அச்சுறுத்தலால் தெற்காசியாவில் சரா சரிக்கும் குறைவாகவே பருவமழை பெய்யும் என காலநிலை அவுட்லுக் போரம் (Climate Outlook Forum) எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மாலத்தீவில் நடைபெற்ற காலநிலை தொ டர்பான மாநாட்டில் தெற்காசிய காலநிலை அவுட்லுக் போரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரவிருக்கும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெரும்பாலான தெற்காசிய நாடுகள் சராசரிக்கும் குறைவான மழையைப் பெற வாய்ப்புள்ளது. இது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நீண்டகால கணிப்புடன் ஒத்துப் போகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டின் மழைப்பொழிவு நீண்டகால சராசரி யில் 92 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமைகள் உரு வாகி, 2026 இறுதி வரை நீடிக்க வலுவான வாய்ப்பு உள்ளது. இது பொதுவாக தென்மேற்கு பருவமழையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைப்பற்றாக்குறை ஏற்பட வுள்ளது.

அதே போல ஆப்கானிஸ் தான், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், மியான்மரின் சில பகுதிகள், இலங்கையின் சில இடங்களில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பருவமழை குறைவதற்கு எல் நினோ ஒரு முக்கியக் கார ணியாக இருந்தாலும், பருவமழை யைத் தீர்மானிப்பதில் அது மட்டுமே முக்கியப் பங்கு வகிக்க வில்லை. இந்தியப் பெருங்கடல் இருமுனை, வெப்பமண்டல அ ட்லாண்டிக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, யூரேசிய நிலப்பரப்பு வெப்பமடைதல் போன்ற பிற காலநிலைக் காரணிகளும் பருவ மழையின் போக்கை வடிவமைப்ப தில் முக்கியப் பங்கு வகிக்கின் றன. எனினும் ஜூன்-செப்டம்பர் காலப்பகுதியில் இந்தியப் பெருங்கடல் இருமுனை உருவா கக்கூடும். இது பருவமழை பொழிவிற்கு சாதகமாக அமையக் கூடும்” என அதில் கூறப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.