தீக்கதிர் உலக செய்திகள்
28 Aug 2026, 8:13 pm

தீக்கதிர் உலக செய்திகள்

எல் நினோ தீவிரம் : ஆய்வில் எச்சரிக்கை

எல் நினோ மாற்றங்கள் மிகவும் தீவிரமடைந்துள்ளதாக ‘சயின்ஸ்’ ஆய்விதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில்எச்சரிக்கப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, சமீபத்திய ஆண்டுகளில் எல்நினோ தெற்கு அலையின் மாறுபாடு (variability) 36சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிக அதிகம் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எல்நினோ தெற்கு அலை என்பது வெப்பமான எல் நினோகட்டத்தையும், குளிர்ந்த லா நினா கட்டத்தையும் உள்ளடக்கியது. இந்த இரண்டுமே பசுபிக் பெருங்கடலைத் தாண்டி வெகுதொலைவில் உள்ள மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையை மாற்றியமைத்து, உலகின்பல பகுதிகளில் வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும்.

சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிக்கு கட்டுப்பாடு

சர்வதேச மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் பணி அனுமதிகளை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் வகையில்,அமெரிக்க ஜனாதிபதிடிரம்ப் பல்கலைக்கழகங்களுக்குப் புதியசுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த விதிகளுக்குக் கீழ்ப்படியாத உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை இழக்க நேரிடும்என்றும் எச்சரித்துள்ளது.இதன் விளைவாக, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில உயர்கல்விநிறுவனங்கள் சர்வதேச மாணவர்களுக்கான பணி அனுமதி விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.