முந்தய பக்கம்

பொருளாதார வளர்ச்சிக்கு எல்-நினோ சவாலாக இருக்கும்

11 Jul 2026, 10:10 pm
பொருளாதார வளர்ச்சிக்கு எல்-நினோ சவாலாக இருக்கும்
<p><strong>பொருளாதார வளர்ச்சிக்கு எல்-நினோ சவாலாக இருக்கும்</strong></p><p>எச்.டி.எப்.சி வங்கியின் நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை</p><p>புதுதில்லி, ஜூலை 11- 2027ஆம் நிதியாண்டில் பொருளா தார வளர்ச்சிக்கு எல்-நினோ சவாலாக இருக்கும் என தனியார் வங்கியான எச்.டி.எப்.சி-யின் நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக எச்.டி.எப்.சி நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகா ரியுமான சசிதர் ஜெகதீசன் வெளியிட் டுள்ள அறிக்கையில்,”மேற்கு ஆசிய நாடு களில் நிலவும் மோதல்கள், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் பண வீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தக்கூடும். குறிப்பாக உலகின் முன்னணி மத்திய வங்கிகள் பின்பற்றும் இறுக்கமான பணவியல் கொள்கைகள், உலகளாவிய பணப்புழக்கத்திற்கு சவாலாக அமையும். அதே சமயம் எல்- நினோ நிகழ்வு மற்றும் வழக்கத்தை விட குறைவான பருவமழை ஆகியவை இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கும். மோசமான பாதிப்பினை கூட ஏற்படுத்தலாம். உலகளாவிய வர்த்தகப் பிரிவினை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நிதிச் சந்தையின் தன்மை ஆகிய வற்றால் ஏற்படும் அபாயங்களை எதிர் கொள்ள, நிதித்துறை தொடர்ந்து எச்ச ரிக்கையுடனும், கவனத்துடனும் செயல் பட வேண்டியது அவசியம்” என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram