தீக்கதிர் உலக செய்திகள்
22 Sept 2026, 9:59 pm

தீக்கதிர் உலக செய்திகள்

எல் நினோ தாக்கம் : உள்நாட்டு உற்பத்தி வீழும்

எல் நினோ தாக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகின்றது. இதன் காரணமாக லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதத்திற்கு நிகரான இழப்புகள் ஏற்படும். மேலும்48 லட்சம் மக்கள் இந்த காலநிலை மற்றத்தால் வறுமையில் தள்ளப்படுவார்கள் என லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான பொருளாதார ஆணையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக எரிசக்தி, விவசாயம், மீன்வளம் மற்றும் உள்கட்டமைப்புஆகிய துறைகளில் மிக அதிகமான தாக்கங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் -டிரம்ப் இடையே மோதல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரதுசெய்திகளை ஊடகங்களுக்கும் வழங்கும் ‘ஒயிட்ஹவுஸ் பிரஸ் பூல்’ பத்திரிகையாளர்கள் குழுவுக்கும்இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. சி.என்.என், எம்.எஸ் நவ்,பொலிடிகோ ஆகிய ஊடகங்களை வெள்ளை மாளிகையில் டிரம்ப் தடை செய்தார். தனக்கு சாதகமற்ற செய்திகளை வெளியிடும் ஊடகங்களை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து டிரம்ப்பின் நிகழ்வுகள் குறித்து எந்தவொருசெய்தியும் வெளியிட மட்டும் எனசெய்திக்குழு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் டிரம்ப் அலுவலகம் தனியாக டிரம்ப் டிவி எனும் புதிய ஒளிபரப்பை துவங்கியுள்ளது.