எல் நினோ தாக்கம்
10 Jul 2026, 8:51 pm
<p><strong>எல் நினோ தாக்கம்</strong> </p><p>ஜூலை 31-க்குள் குறுவை பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல் வேலூர்: வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. இதில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் பேசு கையில், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் வாழ்வாதாரம் மேம்படவும் இயற்கை வேளாண்மை, இயந்திர பயன்பாடு, சந்தை வாய்ப்பு களை உள்ளடக்கிய திட்டங்களை வகுத்து வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.134.83 கோடியிலான குறுவை சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. தோட்டக்கலைப் பயிர்களான காய்கறிகள், பழங்கள், மலர்களின் பரப்பு விரிவாக்கத்திற்கு அதிக ஊக்கம் அளிக்கப்படும் என்றார். தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், ரூ.648 கோடி மதிப்பீட்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவ தாகவும், விவசாயிகள் வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் வாயி லாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் குறுவை நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.</p>
