தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எல் நினோ தாக்கம் - சென்னையின் நிலை என்ன? காயிதேமில்லத் கல்லூரியில் கருத்தரங்கம்

15 Jul 2026, 11:28 pm
எல் நினோ தாக்கம் - சென்னையின் நிலை என்ன? காயிதேமில்லத் கல்லூரியில் கருத்தரங்கம்
<p><strong>எல் நினோ தாக்கம் - சென்னையின் நிலை என்ன? காயிதேமில்லத் கல்லூரியில் கருத்தரங்கம்</strong></p><p>சென்னை, ஜூலை 15 – எல் நினோ தாக்கம் - சென்னையின் நிலை என்ன? எனும் தலைப்பில் புதனன்று (ஜூலை 15) மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரி யில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாது காப்பு சங்கம் (இஏபிஏ), காயிதே மில்லத் கல்லூரி (ஆண்கள்) – மேடவாக்கம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியது. இந்நிகழ்விற்கு இஏபிஏ தலைவர் எஸ்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். அப்துல் தவாஃப் வரவேற்றார். கருத்தரங் கின் நோக்கம் குறித்து இஏபிஏ செயலாளர் எம்.தங்கராஜ் பேசினார். அண்ணா பல்கலைக் கழக உதவி பேராசிரியர் டாக்டர் தினகரன் எல் நினோ தாக்கம் - சென்னையின் நிலை என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது, எல்நினோ ஏற்படுத்தும் தொடர் விளைவுகள், பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம், அதனால் உலகளா விய அளவில் ஏற்படும் அதீத வெப்பம், இயற்கை சீற்றம், வறட்சி, அதீத கன மழை போன்ற பாதிப்புகளை எடுத்துரைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப் பாளர் ஆதித்ய வர்மா, ஜீரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் குறித்து பேசினார். கல்லூரி யின் தாளாளர் எம்.ஜி.தாவூத் மியான் கான் சிறப்புரையாற்றினார். இஏபிஏ பொருளாளர் கே. பாஸ்கர் நன்றி கூறினார். முனைவர் தமிழ்ச்செல்வி, பேரா. பரித் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.