தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

15 Nov 2025, 4:09 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பீகார் தேர்தல் முடிவு:  முதலமைச்சர் கருத்து

சென்னை: பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள  பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். முதுபெரும் தலைவர் நிதிஷ் குமாரின் அபார வெற்றிக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும், பீகார் மக்க ளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு நல்வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இளம்  தலைவர் தேஜஷ்வி யாதவின் அயராத பிரச்சாரத் திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் நலன்புரி வழங்கல், சமூக மற்றும்  சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி மற்றும் அர்ப்பணிப்புள்ள மேலாண்மை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் நற்பெயர் மிகவும் தாழ்ந்த  கட்டத்தில் உள்ளதாகவும், வெற்றி பெறாதவர்களுக்கு கூட நம்பிக்கை அளிக்கும் வகையில் தேர்தல் ஆணை யம் செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர்

துணை முதலமைச்சர்  உதயநிதிக்கு கொலை மிரட்டல்

சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும்  அவரது மகன் இன்பநிதிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். டிஜிபி அலுவலக மின்னஞ்ச லுக்கு தமிழர் விடுதலை அமைப்பு என்ற பெயரில் மர்ம  நபர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், துணை முதலமைச்சர்  உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இருவரையும் கொலை செய்ய 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது

சென்னை: பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற  தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தமி ழகம் முழுவதும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித் துள்ளனர். தாள்-1 தேர்வு சனிக்கிழமையும், தாள்-2 தேர்வு ஞாயிற்றுக்கிழமையும் (நவ.16) நடைபெறுகிறது. தேர்வுகூட நுழைவுச்சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிலர் விண்ணப்ப அடை யாள எண் மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டதால்,  தேர்வுகூட நுழைவுச் சீட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டது  குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பின்னர் விளக்கம் அளித்தது.

இன்றும், நாளையும்  ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை: இலங்கை  கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி யுள்ளது. இதன் கார ணமாக, நவ.16 அன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டி னம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சா வூர், புதுக்கோட்டை, சிவ கங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.17 காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை யிலும் கன முதல் மிக  கனமழையும், சென்னை,  திருவள்ளூர், கடலூர், மயி லாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாத புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக் கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை  ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம்

சென்னை: பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை சுட்டிக்காட்டி, “காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங் கள். காங்கிரஸ் கட்சி  நாட்டுக்கும் தேவை யில்லை, ஊருக்கும் தேவையில்லை” என அதி முகவை சேர்ந்த முன் னாள் அமைச்சர் ராஜேந்திர  பாலாஜி பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் மாநி லத் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியா ளர்களைச் சந்தித்த அவர், “ராஜேந்திர பாலாஜி குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் அரசியல்  நாகரீகம் தெரியாமல் பேசு கிறார். அவர் வெளிப்படை யாக மன்னிப்பு கேட்க  வேண்டும். இல்லையென் றால் போராட்டம் நடத்து வோம்” என்றார்.

எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ  சான்று கட்டாயம்

சென்னை: தமிழ்நாட்டில் தள்ளுவண்டி யில் வைத்து உணவு பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான  கடைகளுக்கும் உரிமம் பெறுவது கட்டா யம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்  துறை உத்தரவிட்டுள்ளது. சான்றிதழ் பெறாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் எனவும், ஆன்-லைனில் இலவசமாக சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் முட்டை  கொள்முதல் விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில்  1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள்  உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட  முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை கொள்முதல் விலை 590 காசுகளாக  இருந்து வந்த நிலையில், அதன் விலையை  5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 595  காசுகளாக அதிகரித்துள்ளது. இதன் மூலம்  கொள்முதல் விலை வரலாறு காணாத வகை யில், புதிய உச்சம் தொட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.