முந்தய பக்கம்

நாமக்கல்லில் முட்டை விலை புதிய உச்சம்

12 Dec 2025, 3:12 pm
நாமக்கல்லில் முட்டை  விலை புதிய உச்சம்
<p>நாமக்கல், டிச.12 - 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் &nbsp;முறையாக நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோழி முட்டை யின் மொத்த கொள்முதல் விலை ரூ.6.15 ஆக உயர்ந்து உள்ளது. இது இதுவரையிலான உச்சபட்ச விலையாகும். இன்றைய நிலவரப்படி முட்டை கொள்முதல் விலை 5 &nbsp;காசுகள் உயர்ந்து ரூ.6.15 ஆக மொத்த வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு &nbsp;முட்டை ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்பனை செய்யப்படு கிறது. கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் &nbsp;விரதமிருப்பதால் அசைவ உணவு நுகர்வு குறைந்திருக் கும் நிலையில்கூட முட்டை விலை இவ்வாறு உயர்ந்து உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு &nbsp;கேக் தயாரிப்புக்காக முட்டை அதிகளவில் கொள்முதல் &nbsp;செய்யப்படுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்க லாம் என்று கருதப்படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் முட்டை விலை மேலும் &nbsp;உயருமோ என்ற அச்சம் நுகர்வோரிடையே எழுந்து உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram