முந்தய பக்கம்

முட்டை விலை 20 பைசா குறைவு

8 Jan 2026, 2:44 pm
முட்டை விலை 20 பைசா குறைவு
<p><strong>முட்டை விலை 20 பைசா குறைவு</strong></p> <p>நாமக்கல், ஜன.8- நாமக்கல் -லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு சார் பில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா &nbsp;குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முன்னணி யில் உள்ளது. தினந்தோறும் சுமார் 80 லட்சம் முட்டைகள் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து மஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு காரணிக ளால் முட்டை விலை கடும் உச்சத்தை அடைந்தது. அதிகபட்ச மாக 6 ரூபாய் 80 காசுகள் வரை முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டது. இந்த முட்டை விலை உயர்வு முட்டை &nbsp;உணவு சார்ந்த கடை வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் முட்டை விலை கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தின சரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை &nbsp;அறிவித்து வருகிறது. இந்நிலையில் வியாழனன்று மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள் முதல் விலை ரூ.5.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை &nbsp;தொடர்ந்து குறைந்து வருவதால் முட்டை உணவு சார்ந்த கடை வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram