உருவபொம்மை எரிப்பு
21 Feb 2026, 4:39 pm
<p><strong>உருவபொம்மை எரிப்பு</strong></p>
<p>காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்துப் பாஜகவினர் புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு ராகுல் காந்தியின் கொடும்பாவியை வெள்ளிக்கிழமை (பிப். 20) இரவு எரித்தனர். இச்சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் பதிலுக்கு எல்லைப்பிள்ளை சாவடியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரசார் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினர் இளைஞர் காங்கிரசாரைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
<p> </p>
