முந்தய பக்கம்

102 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கல்

28 Feb 2026, 2:29 pm
102 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கல்
<p><strong>102 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கல்</strong></p> <p>ஈரோடு, பிப்.28- சித்தோடு அருகே நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில், 102 மாணவர்க ளுக்கு கல்விக்கடனுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளியன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பேசு கையில், இந்தாண்டு 3 ஆயிரம் மாணவர்க ளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கும், ஏற்கெனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்போருக் கும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால், வங்கிகள் மூல மாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது, என்றார். இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந் தியா, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் மூலம் கல்விக்கடனுக்கு விண்ணப்பித்திருந்த 102 மாணவர்களுக்கு ரூ.7.13 கோடிக்கான கல் விக்கடனுதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவே கானந்தன், மாநில முதுநிலை வழிகாட்டி அன் பரசு, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வானதி, நிர்வாக அலுவலர் அருள் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram