முந்தய பக்கம்

கல்விக்கடன் வழங்கும் முகாம் 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி கடனுதவி

13 Nov 2025, 3:30 pm
கல்விக்கடன் வழங்கும் முகாம்   152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி கடனுதவி
<p><strong>கல்விக்கடன் வழங்கும் முகாம்&nbsp; &nbsp;152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி கடனுதவி</strong></p> <p>விருதுநகர், நவ.13- விருதுநகரில் கல்லூரி மாணவ, மாணவி யர்களுக்கு சிறப்பு &nbsp;கல்விக்கடன் வழங்கும் &nbsp;முகாம் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலை மையில் நடைபெற்றது. இதில், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் &nbsp;தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கல்விக்கடன் பெறுவதில் மாணவர்கள், பெற்றோர்களின் சந்தே கங்கள் நிவர்த்தி செய்யப்பட்டது. மேலும், விண்ணப்பித்த தகுதியான மாணவர்களுக்கு 20 &nbsp;நாட்களுக்குள் &nbsp;கல்விக் &nbsp;கடன் வழங்கப்படும். நடப்பு நிதி ஆண்டில் கல்விக்கடன் இலக்காக ரூ.38.11 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம் பர்-2025 வரை 576 மாணவர்களுக்கு ரூ. &nbsp;27.61 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி கல்விக்கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சு.பாண்டிச்செல்வன் உட் &nbsp;பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram