மலைவாழ் மக்கள் குழந்தைகளின் படிப்பை கேள்விக்குறியாக்கும் கல்வித்துறை
17 Dec 2025, 4:11 pm
<p><strong>மலைவாழ் மக்கள் குழந்தைகளின் படிப்பை கேள்விக்குறியாக்கும் கல்வித்துறை</strong></p>
<p>உடுமலை,டிச.17- உடுமலை மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் இருக்கும் பள் ளிக்கட்டிடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பல ஆண்டுகள் புதிய கட்டிடம் கட்ட மறுப்பது ஏன்? என மலைவாழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மலைவாழ் மக்களின் குழந்தை கள் ஆரம்பக்கல்வி கற்க, அரசின் சார்பில் மக்களின் குடியிருப்பு பகு தியில் ஆரம்பப்பள்ளிகள் கட்டப் பட்டுள்ளன. இப்பள்ளிகளுக்கு முறையான கட்டிடம் மற்றும் ஆசிரி யர்கள் இல்லாமல் மலைவாழ் மக்க ளின் குழந்தைகளின் கல்வி முழு மையாக கேள்விக்குறியாகியுள் ளது. குறிப்பாக, உடுமலை தாலுகா பகுதியில் திருமூர்த்தி மலை, மேல் குருமலை, கீழ்குருமலை, குழிபட்டி, மாவடாப்பு மற்றும் பூச்சிக்கொட்டாம்பாறை மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்க ளின் குழந்தைகள் ஆரம்பக்கல்வி கற்க திருமூர்த்திமலை, கீழ்குரு மலை, குழிபட்டி மற்றும் மாவடாப்பு பகுதியில் அரசு பள்ளி கட்டிடம் கட் டப்பட்டுள்ளது. இதில், திருமூர்த்தி மலை தவிர மற்ற மூன்று இடங்க ளில் இருக்கும் பள்ளிக்கூடம் மலை பகுதியில் உள்ளன. இங்கு வேலைக்கு வரும் ஆசிரியர்கள் அந்த பள்ளிகட்டிடத்தில் தான் தங்கி வேலை செய்ய வேண்டும். இத னால் ஆசிரியர்கள் தங்குவதற்கு தனியாக பள்ளியின் அருகில் கட்டி டம் உள்ளது. ஆனால் இந்த பள்ளிக ளுக்கு பல ஆண்டுகளாக பெய ருக்கு மட்டுமே மாதம் ஒரு முறை ஆசிரியர்கள் வருவதாக மலை வாழ் மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங் கள் குடியிருப்பு பகுதியில் தமிழக அரசின் சார்பில் மூன்று ஆரம்ப பள் ளிகள் உள்ளன. இந்த கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தால், எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. கடந்த மூன்று ஆண்டுக ளுக்கு முன்பு உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பொறியா ளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் மழைக்கு இடிந்த குழிபட்டி பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்த னர். அப்போது மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் இது போன்று கீழ் குருமலையில் பள்ளி கட்டிடம் மிக வும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், அந்த கட்டிடத்தையும் ஆய்வு செய்ய கோரிக்கை வைத்த னர். அதை கண்டு கொள்ளாமல் மாவடப்பு பகுதிக்கு சென்றவர்கள் தான், தற்பொழுது வரை பள்ளி கட் டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் இந்த மூன்று பள் ளிகளுக்கும் தனித்தனியாக ஆசி ரியர்கள் உள்ளனர். இங்கு தினமும் தங்கி வேலை செய்ய வேண்டிய, ஆசிரியர்கள் தங்க இடம் இல்லா மல் பெரும் துன்பத்தில் வேலை செய்து வருகின்றனர். இங்கு படிக் கும் அனைத்து குழந்தைகளும் முறையாக கல்வி கற்காமல், ஆரம்ப கல்வி முடித்து ஆறாம் வகுப்பு வேறு பள்ளிக்கு செல்லும் போது கல்வி கற்க முடிவதில்லை. இதனால் படிப்பை தொடர முடியா மல் விட்டுவிடுகிறார்கள் என்றனர். வரும் தலைமுறையினர் கல்வி கற்க அரசு அனைத்து வசதிகளும் செய்து, தரமான பள்ளி கட்டிடம் மற்றும் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்து முறையாக கல்வி கற்றுத்தர வேண்டும் என்பதே இம் மக்களின் கோரிக்கையாக உள் ளது. (ந.நி)</p>
