தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜவஹர் நேசன் தலைமையிலான கல்வி விழிப்புணர்வுப் பேரணி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

23 Sept 2026, 10:56 pm
ஜவஹர் நேசன் தலைமையிலான கல்வி விழிப்புணர்வுப் பேரணி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

ஜவஹர் நேசன் தலைமையிலான கல்வி விழிப்புணர்வுப் பேரணி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

சென்னை, செப். 23 -மேனாள் துணை வேந்தர் ஜவஹர் நேசன் தலைமையில் நடைபெறவுள்ள கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:பொதுமக்கள் மத்தியில் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு, மேனாள் துணைவேந்தர் வெ. ஜவஹர்நேசன் தலைமையில் இயங்கும், “குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி ஜனநாயக வாழ்வுரிமைகளுக்கான இயக்கம்” சார்பில், 2026 செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 16 வரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.

‘நீட்’ தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கை- 2020ஐத் திரும்பப் பெற வேண்டும், அனை

வருக்கும் சமமான தரமான பொதுக் கல்வி வழங்கிட வேண்டும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், சமூக நல ஆர்வமுள்ள குடிமக்கள் ஆகியோர் இணைந்து இந்த சைக்கிள் பேரணியை நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டுக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனுக்காக பொது நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த சைக்கிள் பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதோடு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

கல்வி குறித்த இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்திற்கு பொதுமக்கள் மற்றும் கல்வியின் மீது அக்கறையுள்ள அமைப்புகள் பேராதரவு அளிக்க வேண்டுமென்றும் சிபிஎம் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.