தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமூக முன்னேற்றத்தின் முக்கிய தூண்கள் கல்வியும் வேலை வாய்ப்பும் லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் பேச்சு

23 Jan 2026, 5:49 pm
சமூக முன்னேற்றத்தின் முக்கிய தூண்கள் கல்வியும் வேலை வாய்ப்பும்   லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்  பேச்சு
<p><strong>சமூக முன்னேற்றத்தின் முக்கிய தூண்கள் கல்வியும் வேலை வாய்ப்பும் &nbsp; லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் &nbsp;பேச்சு</strong></p> <p>ஒட்டன்சத்திரம், ஜன.23- கல்வியும் &nbsp;வேலை வாய்ப்புகளும் சமூக முன்னேற்றத்தின் முக்கிய தூண்கள் என்று லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராம்ராஜ் கூறியுள்ளார். ஒட்டன்சத்திரத்தில் உள்ள தமிழக அரசின் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் வெற்றிக்கு விதி செய்வோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. &nbsp;இதில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராம ராஜ் மற்றும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் விபிஆர் இளம்பரிதி ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு உரை &nbsp;யாற்றினார்கள். டாக்டர் வீ. ராமராஜ் பேசியதாவது: தமிழக அரசின் பயிற்சி துறை மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் சென்னையிலும் ஒட்டன்சத்திரத்திலும் மட்டும்தான் உள்ளது. &nbsp;இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒட்டன் சத்திரம் பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் இந்த மையத்தில் இணைந்து பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்று ராமராஜ் கேட்டுக்கொண்டார். &nbsp;மாணவர்களுக்கான கல்வியும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு களும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு தூண்கள் ஆகும். எதிர்வரும் காலங்க ளில் எந்தத் துறைகளில் எத்தகைய வேலை வாய்ப்புகள் அதிகம் உரு வாகின்றன என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றவாறு பட்ட தாரிகளை பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உருவாக்கும் நடைமுறை பல வெளிநாடுகளில் இருந்து வருகின்றன. இதன் மூலம் பட்டம் பெற்றவர்களிடையே வேலை இல்லா திண்டாட்டத்தை தவிர்க்க இயலும் என்று பல நாடுகள் கருதுகின்றன இது போன்ற நடைமுறையை இந்தியாவிலும் அமல்படுத்துவது குறித்து கல்வியாளர்கள் விவாதிக்க வேண்டும் என்று &nbsp; ராமராஜ் தெரி வித்தார். அறிவு, நேரம், உடல் மற்றும் மனநலம், மக்கள் தொடர்புகள் மற்றும் அசையும் அசையா சொத்துக் கள் ஆகியன ஐந்து வகையான சொத்துக்களில் முதன்மையானது அறிவை தேடுவது. போட்டி தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு அறிவுத்தேடல் பிரதான இலக்காக இருக்க வேண்டும். தனி &nbsp;மனிதர்களின் வெற்றிக்கும் சமூ கத்தின் விழிப்புணர்வுக்கும் அறிவு தேடல் அவசியமானது. இலக்கை நிர்ணயம் செய்து, செயல் திட்டத்தை வடிவமைத்து, அதற்காக தொடர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எத்தகைய பழக்கங்களை, அறிவை, திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நாமாக முடிவு செய்வதே வெற்றிக்கு விதி செய்வதாகும் என்றும் அவர் தெரி வித்தார். கடந்த 1956 ஆம் ஆண்டில் நாடும் முழுவதும் 14 கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராம நிகர் நிலை பல்கலைக்கழகம் மட்டுமே தற்போதும் செயல்பட்டு வருகிறது. 197 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காந்திகிராமிய கல்வி வளாகத்தில் 55 துறைகளில் படிப்புகள் கற்பிக்கப் படுகின்றன. &nbsp;பல வெளிநாட்டு மாணவர்களும் தமிழகத்தை சார்ந்த பல கிராமப்புற மாணவர்களும் இங்கு படித்து வருகிறார்கள். தமிழகத்தில் திரு வாரூரில் செயல்படும் பல்கலைக் கழகம் மட்டுமே ஒரே மத்திய பல்கலைக்கழகமாகும். சில மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களும் அமைக்கப்பட்டுள்ளன இந்நிலையில் நிகர் நிலை பல்கலைக்கழகமாக உள்ள காந்திகிராம கல்வி வளாகத்தை மத்திய அரசு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதன் மூலம் திண்டுக்கல் மாவட்ட மாணவர்களும் மற்றவர்க ளும் அதிக பயனை பெறுவார்கள் என டாக்டர் வீ.ராமராஜ் கேட்டுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.