தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“அதிமுக-வை எடப்பாடி முடித்து வைப்பார்” சுப.வீரபாண்டியன் பேச்சு

9 Apr 2026, 5:30 am
“அதிமுக-வை எடப்பாடி முடித்து வைப்பார்” சுப.வீரபாண்டியன் பேச்சு

“அதிமுக-வை எடப்பாடி முடித்து வைப்பார்” சுப.வீரபாண்டியன் பேச்சு

நாமக்கல், ஏப்.8- அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். எடப்பாடி முடித்து வைப்பார் என திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாயன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், எங்கு பார்த்தாலும் இரட்டை இலையும் தாமரையும் குப்பைகள் காணப்படுகின்றன. அதை யும் இந்த தேர்தலில் முற்றிலுமாக நீங்கள் அகற்ற வேண்டும். 70 வயதிற்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களைக் கொண்டு வந்து கொடுக்கிற அரசு இந்த அரசு தொடர வேண்டும்.

அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார், எடப்பாடி முடித்து வைப்பார். எடப்பாடியை சாதாரணமாக கருதாதீர்கள், எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியையே முடித்து விடுவதற்கு அவர் தயாராகி விட்டார். தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் போட்டி என்றால் எப்படி? தமிழ்நாட்டை தமிழ்நாடு ஆளவதா? தமிழ்நாட்டை டெல்லி ஆள்வதா? என்பது உங்கள் முன்னால் இருக்கிற கேள்வி. வாக்காளர்களே, விடையளியுங்கள். தமிழ்நாட்டை தமிழ்நாடு ஆள வேண்டும் என்றால், நம்முடைய ஈஸ்வரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களியுங்கள் என்றார்.

இக்கூட்டத்தில், திருச்செங்கோடு வேட்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.