தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எடப்பாடியின் ‘இழுபறி’ பயணம்!

20 Mar 2026, 2:55 pm
எடப்பாடியின் ‘இழுபறி’ பயணம்!

எடப்பாடியின் ‘இழுபறி’ பயணம்!

“கூட்டணிப் பேச்சுவார்த்தை” என்ற பெயரில் தில்லிக்குக் கிளம்பிச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமித்ஷா கொடுத்த ‘அசைன்மென்ட்’களால் சேலம் சிங்கம் சற்று மிரண்டுதான் போயிருக்கிறது.

சீட் கணக்கும்... அமித்ஷாவின் ‘அன்பும்’ பாஜகவுக்கு 35, பாமகவுக்கு 18, தினகரனுக்கு 9 என 62 இடங்களை வாரி வழங்கிவிட்டு, மீதமுள்ள 172-ல் ‘நானே ராஜா’வாகப் போட்டியிடலாம் என எடப்பாடி கணக்கு போட்டுச் சென்றார். ஆனால், அமித்ஷாவோ, “நமக்குள்ள என்ன கணக்கு எடப்பாடி? ஒரு 40 சீட் பாஜகவுக்குக் கொடுங்க” எனத் தாராளம் காட்ட, வேறு வழியின்றி 67 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாரைவார்க்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டுள்ளார். 167-ல் தான் அதிமுக போட்டி என்பது இப்போது ‘கன்பார்ம்’ ஆகியிருக்கிறது என தில்லி பாஜக வட்டாரம் தகவல். தில்லியா? மெரினாவா? “அன்புமணி, தினகரன் எல்லாம் இங்கேயே வர்றாங்க... இங்கேயே வச்சு அறிவிப்பை வெளி யிட்டுடலாம்” என அமித்ஷா பாசமாக அழைக்க, “ஐயையோ... இது நாடாளுமன்றத் தேர்தல் இல்லீங்க, சட்டமன்றத் தேர்தல்! ஊருக்குப் போய் அறிவிச்சுக்கிறோம்” என எடப்பாடி எஸ்கேப் ஆகியிருக் கிறார். ஊருக்குப் போய் ‘கௌரவமாக’ அறிவிக்கவாவது இடம் கொடுக்க வேண்டுமே என்ற ஆதங்கம் தான் அவருக்கு! தினகரனின் ‘குக்கர்’ பிடிவாதம் “இரட்டை இலையிலேயே நில்லுங்க... செலவு முழுக்க நானே பார்த்துக்கிறேன்” என எடப்பாடி ரூட் போட்டாலும், “அதெல்லாம் முடியாது... எங்க குக்கர் தான் கெத்து” என டிடிவி தினகரன் கறாராக மறுத்துவிட்டாராம். சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது இதுதானோ? விஜய் மேட்டர் - எடப்பாடியின் ‘பதிலடி’ “நடிகர் விஜய்யை ஏன் கூட்டணிக்கு இழுக்கலை?” என அமித்ஷா கேட்டதற்கு, எடப்பாடி கொடுத்த பதில் தான் ‘ஹைலைட்’. “நான் பேசிக்கிட்டுதான் இருந்தேன்... கரூர் விவகாரத்துல கூட அவருக்கு சப்போர்ட் பண்ணினேன். ஆனா, நீங்க சிபிஐ-யை உள்ளே விட்டு எல்லாத்தையும் சொதப்பிட்டீங்க. பன்னீர்செல்வம் விஷயத்துலயும் நீங்கதான் குழப்பத்தை ஆரம்பிச்சீங்க” என அமித்ஷாவிடமே நேருக்கு நேர் ‘பொரிந்து’ தள்ளியிருக்கிறார் எடப்பாடி என்பதும் தில்லி பாஜக வட்டாரத் தகவல்தான்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.