எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் பாஸ் ஆகப் போவதில்லை: கனிமொழி எம்.பி. சாடல்
11 Apr 2026, 5:30 am

எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் பாஸ் ஆகப் போவதில்லை: கனிமொழி எம்.பி. சாடல்

ஈரோடு, ஏப். 10 - படிப்பே வராத பையனைப் பார்த்து யாராவது காப்பியடிக்கிறார்களா? இந்தத் தேர்தலில் பழனிசாமி வெற்றி பெறப் போவதில்லை" என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விமர்சித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் பேசியதாவது: திமுகவை பார்த்து காப்பியடிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தோல்வி பயம் உள்ளவராக மாறிவிட்டதால் அவர் இவ்வாறு பேசுகிறார்.

நீட் தேர்வு, குடியுரிமைச் சட்டம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஏற்றுக் தமிழக மக்களுக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார். தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றாமல், தன்னை வளர்த்த கட்சிக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.

ஒன்றிய அரசு நிதி வழங்காவிட்டாலும், தமிழகத்தின் வளர்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.