பாஜகவின் குரலில் பேசும் எடப்பாடி பழனிசாமி!
12 Apr 2026, 5:30 am

பாஜகவின் குரலில் பேசும் எடப்பாடி பழனிசாமி!

"தொகுதி மறுவரையறை எனப் புதிது எதையும் கூறவில்லை. ஆனால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது"... இப்படிப் பேசி வருவது பாஜக தலைவர் அல்ல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்.

பாஜகவின் குரலை அப்படியே எதிரொலிக்கும் எடப்பாடிக்கு தொகுதிகள் கூடினால் என்ன? குறைந்தால் என்ன? யார் காலில் விழுந்தாவது, யாருக்காவது அடிமை போன்றிருந்தாவது முதல்வர் பதவி பெற்றால் போதும் என்பதுதான் அவரது ஒற்றை இலக்கு. அதனால் தான் இப்படிப் பேசுகிறார். எல்லாம் பதவி படுத்தும் பாடு!

உண்மையில் தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது அவரவர் பெற்றெடுத்த மக்கள்தொகைக்கு மட்டும் நடக்கப் போகிறது என்று நினைத்துத்தான் கூறுகிறார்களா? ஆனால் சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தான் என்பதைத் தெரிந்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. எல்லாம் முதல்வர் நாற்காலி மீதான மோகம் தான் என்று.