முந்தய பக்கம்

கண்ணியக்குறைவான பேச்சு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!

11 Apr 2026, 5:30 am
கண்ணியக்குறைவான பேச்சு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!

கண்ணியக்குறைவான பேச்சு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!

சென்னை, ஏப். 10 - திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக்குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் என்று கூட இல்லாமல் மூன்றாம் தர நிர்வாகி போல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுக கூட்டங்களில் பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசுவது வழக்கமாகிவிட்டது. இதற்காக அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாது சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் போன்றோரும் பெண்களை இழிவுபடுத்திப் பேசுகின்றனர். பொதுவெளிக்கு வரும் பெண்களைத் தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்குத் தமிழ்நாடு பெண்கள் தேர்தல் மூலம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என திமுக மகளிர் அணி தலைவர்கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram