முந்தய பக்கம்

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!

11 Apr 2026, 5:30 am
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்!

கண்ணியக்குறைவான பேச்சு. திமுக மகளிரணி தலைவர்கள் கண்டனம்.

சென்னை, ஏப். 10 - திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை தர்மபுரி தங்கப் பாண்டியன் எம்.பி., கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவான வார்த்தைகளில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் என்று கூட இல்லாமல் மூன்றாம் தர நிர்வாகி போல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பாஜ-வுடன் கூட்டணியில் இருப்பதால் பெண்கள் குறித்து தரம் தாழ்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்!”

எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசனும் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை அதிமுகவினர் செயல்திட்டமாகவே வைத்துள்ளனர்.

பொதுவெளிக்கு வரும் பெண்களை அதிமுகவினர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ்நாடு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு திமுக மகளிரணி தலைவர்கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram