கலைஞர் கருணாநிதி குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறு!
4 Apr 2026, 4:02 pm

கலைஞர் கருணாநிதி குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை, ஏப். 4 - கலைஞர் கருணாநிதி குறித்த எடப்பாடி பழனிசாமியின் அவதூறுப் பேச்சுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டி ருப்பதாவது: அரசியல் நாகரிகம், முதிர்ச்சி வேண்டும்! பொதுவாகவே தேர்தல் களத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் போது அரசியல் நாகரிகத்தோடும், முதிர்ச்சியோடும் அவை அமைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவ ரும், அதிமுக பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி, அண்மையில் தனது தேர்தல் பிரச்சார உரையில், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான கலைஞர் மு. கருணாநிதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மற்றவர்களால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார், அவர் தலைவராக இருந்தபோதே மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கட்சியைக் கைப்பற்றிவிட்டார்கள் என்று அவதூறு செய்திருக்கிறார். பேசுவதற்கு விஷயமின்றி அவதூறு செய்கிறார்! கருத்துக்களும், கொள்கை களும் மோத வேண்டிய களத்தில், தமிழக முதலமைச்சர் குறித்து உண் மைக்குப் புறம்பாக அவதூறு செய்யும் நிலைக்கு அதிமுக பொதுச்செயலா ளர் வந்தது ஏன்? தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களையும், இந்திய மக்களை யும் வஞ்சிக்கும் கூட்டணி கட்சியான பாஜகவைப் புகழ்ந்து பேச எதுவும் இல்லை. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி குறித்து சொல்வதற்கும் எதுவும் இல்லை. எனவே தான், தரம் தாழ்ந்து அவதூறு பிரச்சாரத் தில் இறங்கி இருக்கிறார். கட்சி அடை யாளங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் கடந்து அர சியலில் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளின் எல்லை தாண்டப் பட்டதாகவே இந்த உரையைக் கருத வேண்டி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை பொருத்தமற்ற வகையி லும், கண்ணியக் குறைவாகவும் தொடர்ச்சியாக அமைந்து வருவது தேர்தல் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகிறது என்ற முறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத்தை தெரிவித்துக் கொள் கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.