இரட்டை இலையை ‘அடகு’ வைத்த எடப்பாடி பழனிசாமி!
31 Mar 2026, 4:50 pm
<p><strong>இரட்டை இலையை ‘அடகு’ வைத்த எடப்பாடி பழனிசாமி! </strong></p>
<p>“அம்மா இருந்தால் இப்படி நடக்குமா?” என்ற அதிமுக தொண்டர்களின் ஆதங்கக் கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி ஒரு ‘பம்பர்’ பதில் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்ட லாட்டரி மன்னன் மார்ட்டின் குடும்பத்திற்கு, இப்போது அதிமுகவில் ‘ரத்தினக் கம்பளம்’ விரிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் எதிரி... எடப்பாடியின் வேட்பாளர்! தமிழகத்தில் கள்ள லாட்டரியை ஒடுக்கியவர் ஜெயலலிதா. ஆனால், இன்று மார்ட்டினின் மனைவி லீமா ரோஸை லால்குடி தொகுதி வேட்பாளராக அறிவித்து வரலாற்றுப் பிழையைச் செய்துள்ளார் எடப்பாடி. பழைய விசுவாசிகள் ஓரம் கட்டப்பட, நேற்று வந்த ‘பணப் பெட்டி’களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதுதான் இபிஎஸ்ஸின் ‘புதிய அதிமுக’ மாடலா? மார்ட்டின் குடும்பத்தின் அரசியல் சதுரங்க வேட்டை ஒரே குடும்பம் எல்லாப் பக்கமும் வலை விரிக்கிறது. அதிமுகவில் மனைவி வேட்பாளர், தவெகவில் மருமகன் பொறுப்பாளர், புதுச்சேரி பாஜக கூட்டணியில் மகன் முக்கியப் புள்ளி. மீண்டும் கள்ள லாட்டரியைக் கொண்டு வந்து கொள்ளையடிக்கவே இந்த ஏற்பாடா என்ற அச்சம் எழுந்துள்ளது. பாண்டிச்சேரியில் சரணாகதி அதிமுக முதன்முதலில் ஆட்சி அமைத்த பாண்டிச்சேரி மண்ணில், இன்று வெறும் 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. நேற்று வந்த மார்ட்டின் மகனுக்கு இடங்களை வாரி வழங்கியுள்ளார் எடப்பாடி. பா.ஜ.க-வுடன் மார்ட்டின் குடும்பத்தை இணைத்துவிட்டதில் எடப்பாடியின் பங்கு என்ன என்ற மர்மம் நீடிக்கிறது. பண பலத்தால் தலைமையைக் கைப்பற்றிய எடப்பாடிக்கு, நாளை மார்ட்டின் குடும்பமே கட்சியைக் கைப்பற்றிவிடும் என்ற பயம் இல்லையா? எம்.ஜி.ஆரும் அம்மாவும் காத்த இயக்கம், இன்று லாட்டரி குடும்பத்தின் காலடியில் தஞ்சம் புகுந்திருப்பது தொண்டர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம். எடப்பாடி விதைத்த இந்த ‘விஷ விதை’ நாளையே அவரையும் கட்சியையும் அழிக்கும்.</p>
