தீக்கதிர் முக்கிய செய்திகள்
19 Mar 2026, 3:18 pm

அமித் ஷா-வை தில்லியில் சந்தித்தார் எடப்பாடி!

சென்னை, மார்ச் 19 - அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். பாஜக 30 தொகுதி களைக் கோருவதால் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தா வதில் இழுபறி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்து அமித் ஷாவின் ஒப்புதலைப் பெறவே எடப்பாடி பழனிசாமி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

300 கம்பெனி துணை ராணுவம் தேர்தல் பணிக்காக வருகை

சென்னை, மார்ச் 19 - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக ஏற்கெனவே 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்திருந்த நிலையில், கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 20,000 வீரர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு கம்பெனி என்ற அடிப்படையிலும், கூடுதல் தேவைகளுக்காகவும் மொத்தமாக 300 கம்பெனி வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும் 5 துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அஞ்சல் வாக்கு

சென்னை, மார்ச் 19 - அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், போக்குவரத்துக் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி ஆகிய ஐந்து அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் அஞ்சல் வாக்குகள் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

த.வெ.க.விலிருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார்

சென்னை, மார்ச் 19 - நடிகை ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகியுள்ளார். கடந்த சில நாட்களாக கட்சித் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகி களுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்த ரஞ்சனா, அக்கட்சியை விட்டு விலகி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார்.

சட்டப்பேரவையை திருச்சிக்கு மாற்றுவேன் சீமான் தேர்தல் அறிக்கை

சென்னை, மார்ச் 19- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை கிண்டியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் 5 தலை நகரங்கள் உருவாக்கப்படும். அதன்படி, திருச்சி நிர்வாகத் தலைநகராகவும், சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும், கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை, பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் மாற்றப்படும். மேலும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை திருச்சிக்கு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். வாக்குப்பதிவு கட்டாயமாக்கப்படும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் வாக்குச் சீட்டு முறை மீண்டும் கொண்டுவரப்படும், பெண்களுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் தனித்தொகுதிகள் வழங்கப்படும், திருநங்கையர்க்கு தனி மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். மாநில வரி வருவாயில் 75 சதவிகிதம் மாநிலத்திற்கும், 25 சதவிகிதம் ஒன்றிய அரசுக்கும் வழங்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றெல்லாம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டார்ச் லைட் சின்னத்திலேயே மக்கள் நீதி மய்யம் போட்டி?

சென்னை, மார்ச் 19 - திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தனது சின்னமான ‘டார்ச்லைட்’ சின்னத்தி லேயே தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், சிபிஐ, ஐயுஎம்எல், ம.ம.க. உள்ளிட்ட பல கட்சிகளுடன் ஏற்கெனவே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், திமுக நிர்வா கிகள், சென்னை அண்ணா அறிவா லயத்தில் புதனன்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் 2-ஆம் கட்டமாக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய அருணாச்சலம், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆனால், கடந்த தேர்தல்களில் டார்ச்லைட் சின்னம் மூலம் சுமார் 4 சதவிகித வாக்கு களைப் பெற்றதால் தனிச் சின்னத்தி லேயே ம.நீ.ம. போட்டியிடும் என்று தாங்கள் கூறியதாகவும், எனினும், கட்சித் தலைவர் கமல்ஹாசனின் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது: நயினார் நாகேந்திரன் சொல்கிறார்!

சென்னை, மார்ச் 19 - தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) எந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்த வில்லை என்றும், அக்கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா யாரென்றே தனக்குத் தெரியாது என்றும் பாஜக தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. விஜயின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கத் தாமதிப்பது மற்றும் கரூர் நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை என ஒன்றிய அரசு அழுத்தம் தந்து கூட்டணிக்கு வற்புறுத்துவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, “90 தொகுதிகள் தருவதாகவும், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக இருக்கலாம் என்றும் பேரம் பேசினார்கள். ஆனால் தலைவர் விஜய் அந்த வாய்ப்பை நிராகரித்து, பதவிக்காக தில்லிக்கு அடிபணிய மாட்டோம் என்று கூறிவிட்டார்” என்று பேசியிருந்தார். இது பேசுபொருளாக மாறிய நிலையில்,” தவெகவுடன் எந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், ஆதவ் அர்ஜுனா என்பவர் யாரென்றே தனக்குத் தெரியாது” என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பி.எச்டி. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பு

சென்னை, மார்ச் 19 - சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி. எச்டி. படிக்கும் மாணவர் களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை ரூ. 25 ஆயிரத்தி லிருந்து ரூ.50 ஆயிரமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பொறி யியல் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் முதல்முறை யாக பி.எச்டி. பயில்வோ ருக்கும் ரூ. 50 ஆயிரம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள் ளது. பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 150 இடங்களும், அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தலா 50 இடங்களும் என மொத்தம் 250 பி.எச்டி இடங்களுக்கு தற்போது சேர்க்கை தொடங்கியுள்ளது. பொறி யியல், தொழில்நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விருப்பமுள்ள மாணவர்கள் https://cfr.annauniv.edu என்ற இணையதளத்தில் மார்ச் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் சென்னை: 2024-25-ஆம் ஆண்டில் தமிழ் நாடு 7,997.17 மில்லி யன் டாலர் மதிப்புடைய ஜவுளிப் பொருட்களை ஏற்றுமதி செய்து, ஜவுளி ஏற்றுமதியில் இந்தி யாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது என்று நிர்யாத் நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள் ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த ஜவுளி ஏற்று மதியான 36,610 மில்லி யன் டாலரில் தமிழ்நா ட்டின் பங்கு 21.84 சத விகிதம் ஆகும். குஜராத் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. 2020-21-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ் நாட்டின் ஜவுளி ஏற்று மதி, நான்கு ஆண்டு களில் 29 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள் ளார். “சாதனைகளைச் சொல்வது நாமல்ல, ஒன்றிய அரசே” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வானிலை ஆய்வுமைய தலைவர் பொறுப்பேற்பு சென்னை: சென்னை யில் உள்ள தென் மண் டல வானிலை மையத் தின் தலைவராக சிவா னந்த தாமோதர பை மார்ச் 19ஆம் தேதி பொறு ப்பேற்றுக் கொண்டார். 1992ஆம் ஆண்டு வானி லை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாகப் பணி யில் சேர்ந்த இவர், சுமார் 34 ஆண்டுகால பணி அனுபவம் மிக்கவர். விமான நிலையத்தில் சோதனை சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வந்ததையடுத்து, சென்னை விமான நிலை யத்தின் சரக்கு (கார்கோ) பகுதிகளில் சிறப்பு அதி காரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் தீவிர சோதனை நடவடி க்கைகளை மேற் கொண்டுள்ளது. தங்கம், வெள்ளி, மின்னணு சாதனங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் ஆகியவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்வதோடு, தேர்தல் ஆணையத்திற்கு உட னே தெரியப்படுத்த வேண் டும் என்றும் அறிவுறு த்தப்பட்டுள்ளது.