ஒன்றிய அரசை தட்டிக்கேட்க எடப்பாடிக்கு துணிச்சல் இல்லை! தேன்கனிக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
3 Apr 2026, 6:05 pm
<p><strong>ஒன்றிய அரசை தட்டிக்கேட்க எடப்பாடிக்கு துணிச்சல் இல்லை! தேன்கனிக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்</strong></p>
<p>கிருஷ்ணகிரி, ஏப். 3- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டி யிடும் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இரவு 8 மணிக்கு தேன்கனிக்கோட்டை வந்த அவர், தளி தொகுதி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் டி. ராமச் சந்திரனை ஆதரித்து 'கதிர் அரிவாள்' சின்னத்திற்குப் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஓசூர் மத்திகிரி பேருந்து நிலையத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யாவை ஆதரித்து 'உதய சூரியன்' சின்னத்திற்கும், இரவு 10 மணிக்கு சூளகிரியில் வேப்பனப்பள்ளி தொகுதி திமுக வேட்பாளர் பி. முருகன் (சீனிவாசன்) அவர்களை ஆதரித்தும் உரையாற்றினார். பிரச்சாரத்தின் போது அவர் பேசிய தாவது"பாஜக-வின் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் முரட்டு அடிமை யாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களையும், நிதியையும் வழங்காத நிலையில், அதனைத் தட்டிக் கேட்க எடப்பாடி பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை. ஜாடிக்கேற்ற மூடியாகவே மோடியும் எடப்பாடியும் உள்ளனர். தமிழக அரசு செயல்படுத்திய மகளிர் விடியல் பேருந்துத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இனி உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கினார். மதவெறிக் கூட்டத்திடமிருந்தும், அவர்களது அடிமைகளிடமிருந்தும் தமிழகத்தைக் காக்க மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்." திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாகமே திமுக கூட்டணியின் மகத்தான வெற்றிக்குச் சாட்சி என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.</p>
