எடப்பாடி திமுக வேட்பாளர் காசி வாக்கு சேகரிப்பு
7 Apr 2026, 5:42 pm
<p><strong>எடப்பாடி திமுக வேட்பாளர் காசி வாக்கு சேகரிப்பு</strong></p>
<p>சேலம், ஏப்.7- மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகு தியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காசி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுட் டார். சேலம் மேற்கு மாவட்டம், நங்கவள்ளி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சூரப் பள்ளி ஊராட்சி, பொய் யானூர், குப்பம்பட்டி, செல்லப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி திமுக வேட்பாளர் காசி தீவிர தேர்தல் பரப்புரை யில் ஈடுபட்டார். இந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் அதி கம் உள்ளதால், பெண்கள் வேலைக்குச் செல் வதை எளிதாக்கும் வகையில் 1000 குழந்தை கள் காப்பகங்கள் அமைக்கப்படும் என திமுக வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளை அவர் மக்களிடம் எடுத்துரைத்தார். இந்த பிரசாரத்தில், திமுக ஒன்றிய பொறுப்பாளர் கே.வி. ராஜி, மாவட்ட விவ சாய அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், பொருளாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத் திற்கு வாக்கு சேகரித்தனர்.</p>
