வயிற்று எரிச்சலில் எடப்பாடி 'பிதற்றல்'!
10 Apr 2026, 5:30 am

வயிற்று எரிச்சலில் எடப்பாடி 'பிதற்றல்'!

திமுகவிற்கு பெருகி வரும் மக்கள் ஆதரவைக் கண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாகச் சாடியுள்ளார். 1979-இல் நடந்த கொலை வழக்கு குறித்து அவர் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அன்றைக்கு அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்திருப்பார் என்று ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார். மேலும் ஜானகி அம்மாள் நினைவிடத்தை அதிமுகவினர் சரியாக பராமரிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ள பயத்தில்தான் எடப்பாடி இவ்வாறு பேசுகிறார் என்றும், கொடநாடு வழக்கில் அவருக்குச் சரியான பாடம் புகட்டப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.