முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

6 Apr 2026, 4:15 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

எடப்பாடியின் ‘துரோக’ டைரி “

ராஜ்யசபா சீட் தருவதாக எடப்பாடி ஏமாற்றிவிட்டார்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆதாரம் காட்டிப் பேசி வருகிறார். ஆனால், எடப்பாடி தரப்போ இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என்னை முதல்வராக்கிய சசிகலா, ஆட்சியைக் காப்பாற்றிய ஓபிஎஸ், கூடவே இருந்த செம்மலை ஆகியோருக்கே ‘டிமிக்கி’ கொடுத்தவன் நான்; இதில் நீங்கள் எம்மாத்திரம்?” என்பதுதான் எடப்பாடியின் மைண்ட் வாய்ஸ். துரோக வரலாற்றில் பிஹெச்டி (PhD) முடித்தவர்களிடம் போய், நியாயம் கேட்க முடியுமா?

சமூக ஊடகப் புலிகள் கவனிப்பார்களா? “

எங்கள் கட்சி வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை தைரிய மாக வெளியிட்டுள்ளது, இது போன்ற வெளிப்படைத்தன்மை எங்கே இருக்கிறது?” என்று சமூக வலைதளங்களில் சிலர் ஆர்ப்பரிக்கிறார்கள். வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும் என்பது தேர்தல் சட்டத்தின் கட்டாயம். இதை அனைத்துக் கட்சிகளும் செய்தே ஆக வேண்டும். சட்டப் படி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தைத் தங்களது ‘துணிச்சலான சாதனை’ என்று கூவுவது, அடிப்படை சட்ட அறிவே இல்லாததைக் காட்டுகிறது. சொன்னால் கோபம் மட்டும் வருகிறது!

செங்கோட்டையனின் ‘மெடிக்கல்’ மிராக்கிள்!

த.வெ.க வேட்பாளர் சத்யநாதன் “2034 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று ஏதோ ஒரு கணக்கில் பேச, அவரை மிஞ்சும் வகையில் செங்கோட்டையன் ஒரு மருத்துவக் குறிப்பை வெளியிட்டுள்ளார். “விசில் அடித்தால் குழந்தைகளுக்குச் சளி குணமாகும், பெரியவர்களுக்கு இதயம் பம்ப் ஆகும்” என்று செங்கோட்டையன் அடித்து விட்டுள்ளார். போதாக்குறைக்கு த.வெ.க வேட்பாளரோ இல்லாத 2000 தொகுதிகளைப் பிடிக்கக் கிளம்பியுள்ளார். இவர்களின் பொது அறிவைப் பார்த்தால், தேர்தல் ஆணையம் இவர்களுக்கு ஒரு தனிப் பாடமே நடத்த வேண்டும் போலிருக்கிறது!

Share
FacebookXWhatsAppTelegram