அதானியை எதிர்த்து வழக்கு அனில் அகர்வாலை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை
2 Jun 2026, 8:27 pm

அதானியை எதிர்த்து வழக்கு அனில் அகர்வாலை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை

சென்னை ரூ.57,000 கோடிக்கும் மேல் கடன் இருந்ததால், ஜெய்பிரகாஷ் அசோ சியேட்ஸ் (Jaypee) என்ற பெரிய உள்கட்டமைப்பு நிறுவனம் திவாலாகியது.

இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்க அதானி, வேதாந்தா குழுமம் (ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்கள்) ஆகிய இரு நிறுவனங்களும் போட்டி போட்டன.

வேதாந்தா குழுமம் ரூ.17,926 கோடி தருவதாகக் கூறியது.

ஆனால், வங்கிகள் அதை வேண்டாமென்று மறுத்துவிட்டு, அதானி நிறுவனம் கேட்ட ரூ.14,535 கோடியை ஏற்றுக்கொண்டன.

இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றம், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் தொட ரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் அதானி கைக்குச் சென்றுள்ளது. இந்நிலையில், அதானியை எதிர்த்து ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் வாங்க முயன் றது மற்றும் உச்சநீதிமன்றம், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது உள்ளிட்ட பிரச்சனை களுக்கு இடையே மோடி அரசு அனில் அகர்வா லுக்கு (வேதாந்தா குழும உரிமையாளர்) எதிராக அமலாக்கத்துறையை ஏவியுள்ளது.

நாட்டின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அகர்வாலுக்குச் சொந்த மான வேதாந்தா குழுமம் மும்பையை தலை மையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரு கிறது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய ‘பிராண்ட் கட்டணம்’ செலுத்தியது தொடர்பாக அம லாக்கத்துறை செவ்வாயன்று நாடு முழுவ தும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான நிறு வனங்களில் சோதனை நடத்தியது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கம் உள்பட நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜகவிற்கு அதிகளவில் நன்கொடை தருபவராக இருந்தாலும், அதானியை எதிர்த்த தால் அமலாக்கத்துறையின் சோதனைக்கு உள்ளாகியுள்ளார் அனில் அகர்வால்.