பினராயி விஜயனின் திருவனந்தபுரம், கண்ணூர் வீடுகளில் சோதனை!
27 May 2026, 8:26 pm

பினராயி விஜயனின் திருவனந்தபுரம், கண்ணூர் வீடுகளில் சோதனை!

திருவனந்தபுரம், மே 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமை மிக்கத் தலைவர்களில் ஒருவரும், கேரள முன்னாள் முத லமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனைக் குறிவைத்து, அவரின் திரு வனந்தபுரம், கண்ணூர் வீடு கள் உட்பட பல்வேறு இடங்களில், ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை புத னன்று சோதனை நடத்தியது.

திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டில் அதிகாலை 5.30 மணிக்கு சோதனையைத் துவங்கிய அமலாக்கத்துறை பிற்பகல் 2.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் சோதனை நடத்தியது.

அமலாக்கத்துறை புகுந்த - அந்த அதிகாலை நேரத்திலேயே, பினராயி விஜயன் வசிக்கும் வாடகை வீட்டின் அருகில் உள்ள மக்கள் உட்பட ஆயிரக்கணக் கானோர் அங்கு திரண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் எம்.வி. கோவிந்தன், வி. சிவன்குட்டி, ஜான் பிரிட்டாஸ், வி. ஜாய், அன வூர் நாகப்பன், வி.கே. பிர சாந்த் உள்ளிட்ட தலைவர் களும் விரைந்து வந்தனர்.

அவர்கள், ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிரா கவும், அப்பழுக்கற்ற தங்க ளின் தலைவர் பினராயி விஜயனை அவதூறு குற்றச்சாட்டுக்கள் மூலம் களங்கப்படுத்தும் முயற்சி ஒருநாளும் வெற்றிபெறாது என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல பினராயி விஜயனின் கண்ணூர் இல்லத்திலும், பினராயி விஜயனின் தனி உதவி யாளர் முகமது ரியாஸின் கோழிக்கோடு இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

கண்ணூரில் நடத்தப் பட்ட சோதனையின்போது, அந்த வீட்டின் முன்பு சிபிஎம் தலைவர்கள் எம்.வி. ஜெயராஜன், பி. ஜெயராஜன், கே.கே. ராஜேஷ், கே.கே. ஷைலஜா ஆகிய தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான சிபிஎம் தொண்டர்கள் திரண்டனர்.

வெறுங் கையோடு திரும்பிய அதிகாரிகள்!

பினராயி விஜயனின் திருவனந்தபுரம் வாடகை வீட்டில் சுமார் 9 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில், அங்கிருந்து அதிகாரிகள் எதையும் கைப்பற்ற முடியவில்லை.

கண்ணூர் வீட்டில், ஐந்தரை மணி நேர சோதனை மேற்கொண்டும், எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று அமலாக்கத்துறை கூறி யுள்ளது.

அதனை தனது சோதனை தொடர்பான அறிக்கையிலேயே அம லாக்கத்துறை தெரிவித் துள்ளது.

பினராயி விஜயனின் தனி உதவி யாளர் முகமது ரியாஸின் கோழிக்கோடு இல்லத்தி லும் எதுவும் கிடைக்க வில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.