முந்தய பக்கம்

மிசோரமில் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

5 Jun 2026, 12:46 am
மிசோரமில் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

மிசோரமில் 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

இந்தியாவிற்குள் மியான்மர் நாட்டுப் பாக்குகள் சட்டவிரோ தமாகக் கடத்தப்பட்டது தொ டர்பாக, மிசோரம் - மியான்மர் எல்லை யில் உள்ள சம்பாய் எல்லைப் பகுதியில் 9 இடங்களில் அமலாக்கத்துறை வியா ழக்கிழமை சோதனைகளை மேற் கொண்டது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை கூறுகையில்,“சோதனையின் கீழ் இருக்கும் நபர்கள் மியான்மரைச் சேர்ந்த பாக்குச் சரக்குகளை ‘தியாவ்’ நதி வழி யாகச் சட்டவிரோதமாகக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் அவற்றை உள்ளூர்க் கிடங்குகளில் சேமித்து வைத்து, போலியான இ-வே பில்கள், ஆவணங்க ளைப் பயன்படுத்தி, அவை உள்ளூரி லேயே சட்டப்பூர்வமாக வாங்கப்பட்ட வை போலக் காட்டியுள்ளனர்.

இந்தச் சட்டவிரோதக் கடத்தல் மூலம் பல நூறு கோடி ரூபாய் பணம் சம்பாதிக்கப்பட்டு, அது முறையாகப் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது உள்ளூர் பழங்குடியின அந்தஸ்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சுங்கத்துறையி னரால் பறிமுதல் செய்யப்படும் கடத் தல் பொருட்களை விடுவிப்பதற்காக, சம்பந்தமில்லாத பழைய இறக்குமதி ஆவணங்களைக் காட்டி ‘உரிமையா ளர்கள்’ போலச் செயல்பட்டுள்ளனர்.

இதனால் தான் மிசோரம் மாநிலத்தின் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது” என அமலாக்கத்துறை தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram